ஊரடங்கு சட்டத்தினை மீறிய 45பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது

கொரனா தொற்றினை தடுக்கும் வரையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 45பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனிநபர்களின் வீட்டில் தனிப்படுத்தலை ஏற்படுத்தி கொரனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதனை தடுக்கும் வகையிலும் இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
 
இந்த ஊரடங்கு சட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பூரண ஆதரவு வழங்கிவரும் நிலையில் ஒரு சிலர் அவற்றினை மீறும் வகையில் செயற்பட்டுவருகின்றனர்.
 
இவ்வாறானவர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களில் காத்தான்குடியில் 19பேரும்,மட்டக்களப்பில் 10பேரும் வாழைச்சேனையில் 15பேரும் கொக்கட்டிச்சோலை பகுதியில் 01வருமாக 45பேர் பொலிஸாரினர் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையிலான நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுத்துவருகின்றது.
 
அதேபோன்று மட்டக்களப்ப மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளும் தடையின்றி மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
 
இதேநேரம் ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் செயற்படுவோருக்கு எதிராக இன்றுமுதல் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts