எஞ்சியிருக்கும் மட்டக்களப்பின் எல்லைகளும் எமது கையிலிருந்து தவறிப்போகும் நிலமை ஏற்பட்டுள்ளது –

 
எஞ்சியிருக்கும் மட்டக்களப்பின் எல்லைகளும் எமது கையிலிருந்து தவறிப்போகும் நிலமை ஏற்பட்டுள்ளது – வேட்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

வெருகலிலிருந்து,மன்னப்பிடிட்டி, தொடக்கம், உகந்தைவரை மட்டக்களப்பின் எல்லை இருந்தது தற்போது மட்டக்களப்பின் எல்லைகள் மாற்றமடைந்துள்ளது. தற்போது எஞ்சியிருக்கும் மட்டக்களப்பின் எல்லைகளும் எமது கையிலிருந்து தவறிப்போகும் நிலமை ஏற்பட்டுள்ளது என தமிழர் விடுதலைக்கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அருண் தம்பிமுத்து. தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (26) அவரது “அருணோதயம்” எனும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறுகுறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

இந்த மண் எமது மண்ணாகும். இந்த இலங்கை எமது இலங்கை ஆகும்.இந்த மண்ணின் வளங்கள் எமது மக்களின் வளங்கள்.இந்த மண்ணின் எதிர்காலம் எமது கையில் இருக்கின்றது.இது இன்னும் எவ்வளவு காலத்திற்கு எமது மக்களின் கைகளில் இருக்கப்போகின்றது என்ற கேள்வி எமது மனங்களில் எழ வேண்டும்.

மட்டக்களப்பு தமிழகனத்தின் இளைஞர் யுவதிகள் தமிழ் மணுக்காக தமது வாழ்க்கையை அற்பணித்தார்கள். மாறாக அவர்கள் மட்டக்களப்புக்காக மாத்திரம் அற்பணிப்பை முன்னெடுக்கவில்லை. தமிழர் ஒருமைப்பாட்டுக்காகவும், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்திற்காகத்தான் தமதுஉயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். 

துரதிஸ்ட்டவசமாக தமிழர்களானல் முன்னெடுக்கப்பட்ட ஒவ்வொரு நகர்வும் தமிழர்களுக்குத் தகுந்த தீர்வைக்கொடுக்கவில்லை. 1948 ஆம் அண்டிலிருந்து எந்த அரசாங்கங்கள் மாறினாலும், அரசின்கொள்கைகள் ஒன்றாகத்தான் இருந்து வந்துள்ளதை தமிழர்கள் அவதானித்துத்தான்வந்துள்ளார்கள்.இந்நிலையில் தமிழர்களுக்குக் கிடைத்த பல சந்தர்ப்பங்களும் நழுவிப்போய்விட்டன. 

தற்போது போர் முடிந்து 10ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழர்களின் பொருளாதாரம், இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.அதிலும் மட்டக்களப்பிலுள்ள தமிழர்களின் பொருளாதாரம் மிகவும் வேதனைக்குள்ளாகத்தான் இருக்கின்றது. திருகோணமலையில் 2400 சதுரக் கிலோமீற்றர் கொண்ட அந்த நிலப்பரப்பிலே,தற்போது தமிழர்களின் ஆதிக்கத்திலே வெறுமனே 290 சதுரக்கிலோமீற்றர்தான் இருக்கின்றன.அதுபோல்அம்பாறை மாவட்டத்திலே வெறுமனே 7 வீத நிலப்பரப்புத்தான் தமிழர்களின்  ஆதிக்கத்துக்குள் இரக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழர்களின் விகிதாசாரம் தற்போது மழுங்கி 69வீதமாகக் காணப்படுகின்றது. இவற்றுக்கெல்லாம் காரணம் வெறுமனே போராட்டம் இல்லை.தற்போது மட்டக்களப்புஇளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பக்களுக்காக இங்கிருந்த வெளி மாவட்டங்களுக்குச் செல்கின்றார்கள்.கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 30 ஆயிரம் போர் மட்டக்களப்பைச் சார்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.அதுபோல் மத்திய கிழக்கு நாடுகள், மேற்கத்தேயநாடுகளில் 150000 பேர் தாம் காதலித்த மட்டக்களப்பு மண்ணை விட்டு வாழ்கின்றார்கள்.

இந்த பொன்நாட்டின் வளங்கள் உலகறிந்தன.இந்த வழங்களை வெவ்வேறு நாடுகளும் சூறையான பல முன்னெடுப்புக்களை கொண்டன.தற்போது நாம் நமது மண்ணின் அடையாளத்தைக்கூட இழக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு மாற்றீடாக இந்த மண்ணில் பிறந்து வளரும் ஒவ்வொரு இளைஞர்யுவதிக்கும், இந்த மண்ணில் எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதே எனது கவாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Related posts