எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாளுக்கான அரைகூவல் விடுக்கின்றனர் மாவடிமுன்மாரி பிரதேச மக்கள்

கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஆரம்ப கட்ட துயிலுமில்லங்களின் சிரமதானப்பணி தேசத்தின் வேர்கள் போராளிகளினால் இன்று 16 ஆம் திகதி மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் நடைபெற்றது.
இதன் போது மாவடிமுன்மாரி பனிச்சையடிமுன்மாரி ஆகிய கிராமங்களில் உள்ள மாவீரர் குடும்பங்களின் பெற்றோர்கள் தேசத்தின் வேர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பொதுமக்கள்  மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் முதற்கட்ட சிரமதானப்பணியில் ஈடுபட்டுள்ளோம் அந்தவகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் சகலதும் பூர்த்தியாகியுள்ளன.
அந்தவகையில் கடந்தகாலங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் மட்டுமே பல ரூபா செலவில் செய்துவந்தனர் அதன்பிரகாரம் ஒஸ்போர் பல்கலைக்கழகத்தில் பல நிகழ்வுகள் நடைபெற்றுவந்துள்ளன.
ஆகவே பல லட்ச ரூபா செலவுகளில் புலத்தில் மாவீரர் தினங்களை குறைத்து வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிப்பதற்கு உறுதுணையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என மாவடிமுன்மாரி துயிலுமில்ல பொதுமக்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

Related posts