நான் இன்று ஒரு வழக்கறிஞராக ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஒரு மாவட்ட ஒருங்ணைப்புக்குழுத்தலைவியாக இருக்கிறேன் என்றால் அதற்குக்காரணம் நான் கற்ற கல்விதான் என்பதை ஆணித்தரமாகக்கூறுவேன்.
மேற்படி நிகழ்வு காரைதீவு விபுலாநந்தர் கலாசார மண்டபத்தில் பிரதேசசபைசெயலாளர் அ.சுந்தரகுமார் தலைமையில் நடைபெற்றது.
முதன்மை அதிதியாக காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்து சிறப்பித்தார்.
நானும் சிறுவயதில் இந்தப்புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதேபோல் இங்கு வந்துள்ள எனதுமகளும் கடந்த 2015இல்சித்திபெற்றபோது அவளை விட எனக்குச் சந்தோசமாகவிருந்தது.
கல்விதான் எமக்கு முக்கியம்.நல்லதொரு நாட்டைக்கட்டியெழுப்ப கல்விதான் அடிப்படை. அதற்காகவே எமது ஜனாதிபதி புதிய கல்வித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்.
மாணவர்களை இந்த போதைப்பொருள் பாவனையிலிருந்து காப்பாற்றவேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. என்றார்.
எமது நாட்டு தேசியகீதம் தமிழிலும் பாடப்படவேண்டும் என்பதில் மறுகருத்து இருக்கமுடியாது. நாம் அதற்காக எதையும் செய்வோம்.
நிகழ்ச்சியை வேதசகா தொகுத்தளித்தார்.