எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக, நேற்று (10) நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒக்டேன் 95 ரக மற்றும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 161 ரூபாவாகவும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 149 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 133 ரூபாவாகிறது.
ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையும் 5 ரூபாபவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஒட்டோ டீசலின் புதிய விலை 123 ரூபாவென பெற்றோலிய வளத்துறை அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனமும் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 123 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், யூரோ F ரக சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை133 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.