சங்குமண்கண்டி கடற்பரப்பில் எரிந்துகொண்டிருந்த பனாமாக்கப்பலிலிருந்து கடற்படையினரால் மீட்கப்பட்ட பிலிப்பைன்ஸ் மாலுமி பொறியியலாளர் எல்மோவிற்கு நேற்று இரவு 3மணிநேரம் சத்திரசகிச்சை நடைபெற்றது.அதன்பின்னர் அதிதிவீரசிகிச்சைப்பிரிவில் செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டநிலையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.
இவ்வாறு கல்முனை ஆதாiவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
நேற்றுமாலை கடற்படையினரால் கொண்டுவரப்பட்ட 57வயதான பிலிப்பைன்ஸ் மாலுமிக்கு எவ்வித தீக்காயங்களும் இருக்கவில்லை. மாறாக கப்பலின் வொயிலர் வெடித்தவிபத்து காரணமாக நெஞ்சிலும் வயிற்றுப்பகுதியிலும் பாரிய வெட்டுக்காயங்களிருந்தன. விலாஎலும்பு உள்ளிட்ட சில எலும்புகள் முறிவுக்குள்ளாகியிருந்தன.
முதலில் அவரை கொரோனாவிற்கான பிசீஆர் பரிசோதனைக்கான மாதிரியை எடுத்தபின்னர் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் சத்திரசிகிச்சைநிபுணர் டாக்டர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினர் இரவு 6மணிமுதல் 9மணிவரை பாரிய சத்திரசிகிச்சையிலீடுபட்டனர்.
அதன்பின்னர் அவர் அதிதிவீரசிக்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்டு தற்போது அங்கு அவருக்கு பாதுகாப்பானநிலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. செயற்கைச்சுவாசம் வழங்கப்பட்டுவருகிறது. தற்போதைக்கு உடல்நிலை குறித்து எதுவும் சொல்லமுடியாது.
கொரோனா பரிசோதனை முடிவு இன்று(4)மாலைவரும். அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கடற்படை மீட்பு பணி நடவடிக்கை :
அம்பாறை – சங்கமன்கண்டியை அண்மித்துள்ள கடற்பகுதியில் விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பலில் தீ பரவி வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 1700தொன் எரிபொருள் உள்ள கொள்கலன் பகுதிக்கு தீயைத் தாவவிடாமல் இந்திய இலங்கை கடற்படைக்கப்பல்கள் போராடிவருகின்றன்;. தற்போது 5கப்பல்கள இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன..
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ரஷ்ய யுத்த கப்பல்கள் இரண்டும் தீயை அணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன.
குவைத்திலிருந்து இந்தியா நோக்கிப் பயணித்த கப்பலில் இன்று முற்பகல் தீ பரவியுள்ளது.தீ பரவியபோது குறித்த கப்பல் 37 கடல் மைல் தொலைவில் பயணித்துள்ளது.
பனாமா நாட்டின் தேசியக் கொடியுடன் மசகு எண்ணெய்இ டீசலுடன் குறித்த கப்பல் பயணித்துள்ளது. ஆவு நேற னுயைஅழனெ எனும் கப்பலின் சமையலறையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதுடன்இ
இது தொடர்பில் காலை 8.05 மணியளவில் இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தகவல் கிடைத்ததும் கடற்படையின் சயுர மற்றும் ரணசிறி கப்பல்கள் குறித்த பகுதியை சென்றடைந்துள்ளன.
தீ பரவிய சந்தர்ப்பத்தில் கப்பலில் ஊழியர்கள் 23 பேர் இருந்துள்ளதுடன் அவர்களில் பெருமளவிலானோர் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்களாவர்.குறித்த வர்த்தகக் கப்பலில் பயணித்த 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.விபத்தில் காயமடைந்த பொறியியலாளர் மாலை மீட்கப்பட்டு கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கப்பலின் கெப்டன் மற்றும் ஊழியர் ஒருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு கடற்படையினரின் கப்பலில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன்இ அவர்கள் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கிரேக்கத்தைச் சேர்ந்தவரே குறித்த கப்பலின் கெப்டனாக பொறுப்பு வகிக்கின்றார்.கப்பல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கென விமானப்படைக்குச் சொந்தமாக டீநநஉhஉசயகவ ரகத்தைச் சேர்ந்த கண்காணிப்பு விமானம் ஒன்றும் ஆலு17 ரகத்தை சேர்ந்த ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளன.தீயைக் கட்டுப்படுத்துவதற்கு ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிடப்பட்டிருந்த யுத்த கப்பல்கள் இரண்டின் உதவியை கோரிய வேளையில்இ அவை இரண்டும் மாலை செல்வதற்கு தயார் நிலையில் இருந்தன.
இதேவேளைஇ கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம்இ கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இந்த நிலை தொடர்பில் இன்று பகல் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டன.கப்பலில் இருந்து எண்ணெய் வௌியேறுமாக இருந்தால் நாட்டின் கடல் வலயம் பாரியளவில் பாதிப்பிற்குள்ளாகும் ஆபத்து காணப்படுகின்றது.
இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக இலங்கை கடற்படைக்கு உதவுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சங்கமன் முனையில் 38 கி.மீற்றருக்கு அப்பால் விபத்திற்குள்ளாகியுள்ள கப்பலில் வெடிப்புச் சம்பவம் அதிகம் ஏற்பட்டதால் கிழக்கு பிராந்திய (வடக்குஇ தெற்கு) கடற் பகுதிகளில் எண்ணை கசிவின் தாக்கம் அதிகரித்து கடல் நீரூடன் கலந்துள்ளது .
இதன் விளைவாக கடலின் அலைகள் சற்று உயர்ந்தும் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவே மீனவர்கள் மற்றும் கரையோர பிரதேசங்களில் உள்ள மக்கள் சற்று அவதானமாக இருக்குமாறுகேட்டுக்கொள்கின் றனர்.
மேலும் அலை உயர்ந்து காணப்படும் என்பதுடன் வேறு எவ்வித பாதிப் ஏற்படுத்தமாட்டாது எனவும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் மூலம் பெட்ரோலிய எரிபொருட்கள் சிந்தி இலங்கை-இந்திய கடற்கரைகளை அசுத்த படுத்தாது என இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது இருந்தாலும் கடற்கரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவினரும் சுகாதாரத்துறை நாங்களும் தொடர்ச்சியான அவதானிப்பில் இருப்போம் என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாகடர் குண.சுகுணன் தெரிவித்துள்ளார்.