இலங்கைத் தீவில் ஆகமம் சாராத வழிபாட்டு முறைகளில் கண்ணகி வழிபாடு பிரசித்தி பெற்றது. இவ் வழிபாட்டு முறைமையை சிங்கள பௌத்த மக்களும் பத்தினி தெய்யோ என அழைத்து வழிபடுவது வழக்கம்.
குலதெய்வ வழிபாட்டு முறைகளில் வைகாசி சடங்கினை ஈழத்து வாழ் சைவ மக்கள் பய பக்தியுடன் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற எருவில் கண்ணகி அம்மன் ஆலயத்தின் உற்சவ காலத்தை முன்னிட்டு எருவில் பிரதேசவாழ் மக்கள் கிராமிய தெய்வ வழிபாட்டை வெகு சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.
கற்புக்கரசி கண்ணகி கோவலன் வரலாற்றை தற்கால சமூகத்திற்கு எடுத்தியம்பும் வகையில் சிறப்புடன் நடைபெற்றுவருகின்றன.
எருவில் கண்ணகி அம்மன் ஆலயமானது அப்பிரதேசத்தில் வாழும் குடி வழி மக்களின் பங்களிப்போடு குறுகிய ஒன்பது மாத காலத்திற்குள் கும்பாவிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு திருவிழாக்காலம் வெகு சிறப்புடன் நடைபெறுவது பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்.
அந்த வகையிலேயே மிகவும் குறைந்த காலத்தில் நேர்த்தியான முறையில் ஆலயத்தை மீள்கட்டுமானம் செய்து உரிய காலத்தில் அம்மனின் திருக்குளிர்த்தி. பாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்த அனைத்து குடித்தலைவர்கறளையும் பிரதம குரு உட்பட ஆலய தர்ம கர்த்தாக்களையும் கௌரவிக்கும் நிகழ்வு சமூக சேவகர் அ.வசீகரன் அவர்களின் முழு நிதி அனுசரணையில் இன்று இரவு ஆலய முன்றலில் நடைபெற்றது.
அம்மனின் திருக்குளிர்த்தி நிகழ்வானது நாளை காலை நடைபெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது