எருவில் கிராமத்தில் உள்ள இரண்டு வீதிகளுக்குமான முதற்கட்ட வேலைகள் அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

எருவில் கிராமத்தில் உள்ள மிகவும் முக்கியமான இரண்டு வீதிகளுக்களை செப்பனிடுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

 
எருவில் கிராமத்தில் நீண்ட காலமாக எந்தவிதமான புனரமைப்பு இல்லாமல் இருந்த எருவில் ஐயனார் ஆலயத்தில் இருந்து மயாணம் வரையான வீதி மற்றும் அங்கத்தவர் வீதி ஆகிய இரண்டு வீதிகளுக்குமான ஆரம்ப வேலைகள் இன்று சனிக்கிழமை எருவில்  தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.
 
எருவில் கிராமத்தில் பல ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக மக்கள் பிரயாணம் செய்வதற்கு கஷ்டமாக இருந்த இரண்டு வீதிகளையும் முழுமையாக செப்பனிட்டு தரவேண்டும் என்று எருவில் கிராமத்தை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான இராமலிங்கம் தில்லைநாயகம் அரசாங்க அதிபரிடம் கூறியதற்கு அமைவாக இன்று இரண்டு வீதிகளுக்குமான நான்கு மில்லியன் ரூபாய்க்கான முதற்கட்ட வேலைகள் அரசாங்க அதிபர்.மா.உதயகுமார் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி வில்வரெத்தினம்     எருவில் தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் இ.வேனுறாஜ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்  என்.நவநீதன்
மற்றும் ஆலயங்களின் தலைவர்கள் பழைய மாணவர் சங்கத்தினர் ,கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts