கல்முனை உப பிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில் பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல், இரு சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே தரமுயர்த்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கிழக்கு இலங்கை அரபுக் கல்லூரியின் 9ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (09) அட்டாளைச்சேனையில் நடைபெற்ற பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.செய்தியாளர்கள் மத்தியில் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;நீண்டகாலமாக சர்சைக்குரிய விடயமாக இருந்துவரும் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசியிருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகண்ட பின்னரே இது சாத்தியமாகும்.இரு பிரதேச செயலக பிரிவுக்குள் இருக்கின்ற சமூகத்தினர் இரு வேறாக தனித்தனியே பிரிந்துசெல்வது திருப்திகரமான விடயமாகத் தெரியவில்லை. தனியே ஒரு சமூகம் மாத்திரம் பிரதேச செயலகம் ஒன்றுக்குள் இன ரீதியாக உள்வாங்கப்பட வேண்டும் என்பது சாத்தியமான விடயமல்ல.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...