எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கு ஆதரவுகோரி ஞாயிறு அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் எழுக தமிழ் பரப்புரைக் குழுவினரால் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரணைதீவு இரணைமாதா நகர், நாச்சிக்குடா, முழங்காவில், தேவன்பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மக்களையும் சமூக அமைப்புகளையும் சமூக செயற்பாட்டாளர்களையும் இதன்போது சந்தித்து பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முழங்காவில் இரணைமாதா நகரில் உள்ள செபமாலை மாதா தேவாலயப் பகுதி, நாச்சிக்குடா அன்னைவேளா ங்கன்னி ஆலாய பகுதிகளில் ஞாயிறு ஆரதனை முடித்து வெளியேறிய மக்களுக்கும், நாச்சிக்குடா பொதுச்சந்தை பகுதியிலும் எழுக தமிழ் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அத்துடன், முழங்காவில் பேரூந்து நிலைய பகுதியில் உள்ள கடைகள், பொதுமக்கள், பேரூந்து பயணிகளிடமும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன் சமூக ஆர்வலர்கள் சிலருடனும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இவைதவிர,
• இரணைதீவு இரணைமாதா நகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்
• நாச்சிக்குடா கடற்றொழிலாளர் கூட்டுற்வுச் சங்கம்
• நாச்சிக்குடா கிராம அபிவிருத்தி சங்கம்
• நாச்சிக்குடா அன்னைவேளாங்கன்னி ஆலாய பாதிரியார்
• நாச்சிக்குடா சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்
• தேவன்பிட்டி சென் சேவியர் விளையாட்டுக் கழகம்
• தேவன்பிட்டி தூய பிரான்சிஸ்த சவேரியார் ஆலய பங்குத்தந்தை ஆகியோருடன் நேரில் சந்தித்து, எழுக தமிழ்-2019 நடாத்தப்பட வேண்டிய அவசர அவசியம் குறித்தும், தமிழ்த் தேசமாக நாம் ஒன்றிணைவதன் முக்கியத்துவம் குறித்தும், தமிழ்த் தேசிய அரசியல் நிலை குறித்தும் விரிவாக உரையாடப்பட்டு எழுக தமிழ்-2019 பிரசுரங்களுடன் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைபு கையேடும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
எழுக தமிழ்-2019
தமிழ் மக்கள் பேரவை