ஏழுவகைநுண்கலை வித்தியாரம்பத்துடன் நிறைவுபெற்ற இந்துகலாசாரதிணைக்களத்தின் கிழக்கு நவராத்திரிவிழா

இந்து சமய கலாசாரத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நவராத்திரிவிழா நடனம் ,பண்ணிசை, மிருதங்கம் ,வீணை ,வயலின் ,கதாப்பிரசங்கம் ,யோகாசனம் ஆகிய  ஏழு வகையான கலைகளின் வித்தியாரம்பம் மற்றும் கும்பம்சொரிதலுடன் நிறைவுபெற்றது.
 
இதேவேளை சிறுவர்களுக்கான வித்தியாரம்பமும் நடைபெற்றது. இதனை அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ஆகியோர் நிகழ்த்திவைத்தனர்.
 
இந்துசமய கலாசாரத் திணைக்களம் காரைதீவு பிரதேசசெயலகம் மற்றும் காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து வரலாற்றில் முதற்தடவையாக இத்தகைய நவராத்திரிவிழாவை ஒழுங்குசெய்திருந்தது.இந்துசமய கலாசாரத்திணைக்கள பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலில் ,திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் இவ்விழா சுகாதாரநடைமுறைவிதிக்கமைய ஏற்பாடுசெய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
 
இறுதிநாள் விஜயதசமி  விழா, காரைதீவு பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன்  தலைமையில் நடைபெற்றது. பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் விசேடஅதிதிகளாக தவிசாளர் கி.ஜெயசிறில் ,நடனத்துறை முனவர் திருமதி நிசாந்தராகினி திருக்குமரன் ,சுவாமி விபுலாநந்த பணிமன்றமுன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, அறங்காவலர் ஒன்றியதலைவர் இரா.குணசிங்கம், செயலாளர் சி.நந்தேஸ்வரன்,  வளவாளர்களான திருமதி புவனம் ஜெயகணேஸ் ,சைவப்புலவர் திரு யோகராஜா கஜேந்திரா  ,செல்வி ஜேசுதாஸ் ஜினித்தா,திரு எஸ்.கோகுலராமன்,செல்வன் ஜெ.குனேக்காந் ,செல்வி ஜெயகோபன் தட்சாயினி   உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தார்.இவ்விழாவில் அறநெறி மாணவரின் பேச்சு நடனமும் இடம்பெற்றது. விசேடபூஜை பஜனை வழிபாடும்  .டம்பெற்றது.
 
திணைக்களத்தின் பணிப்பாளர்  அ.உமாமகேஸ்வரன் மெய்நிகர் அலையில் உரையாற்றினார்.
 
இந்துகலாசாரஅமைச்சின் காரைதீவு சுவாமிவிபுலாநந்தர் கற்கைகள் நிறுவக நடனவளவாளர் ஜெயகோபன் தாட்சாளினி பொன்னாடைபோர்த்துக்கௌரவிக்கப்பட்டார். மாணவியரின் நடனம் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் நடனம் பேச்சு  நடைபெற்றது.

மாவட்ட இந்துசமயகலாசார உத்தியோகத்தர் கே.பிரதாப் பிரதேசஇந்துசமய அபிவிருத்திஉத்தியோகத்தர் திருமதி எஸ்.சிவலோஜினி நிகழ்ச்சிகளை தொகுத்து நெறிப்படுத்தினார்.
 
இறுதியாக கும்பம்சொரிதல் நிகழ்வு மணிமண்டப வளாகத்தில் நடைபெற்றது.

Related posts