மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலார் பிரிலிலுள்ள களுவங்கேணி கிராமத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வீ எபக்ட் நிறுவனத்தினூடாக காவியா பெண்கள் அமைப்பினால் செயற்படுத்தப்பட்ட கிராமிய பெண்கள் கூட்டுறவுடன் உருவான விவசாயப் பண்னையினை திறந்துவைக்கும் நினழ்வு புதன்கிழமை (23) இடம்பெற்றது.
காவியா பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் வீ எபக்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ரி.மயூரன், தேசிய திட்ட இணைப்பாளர் பிரியந்த ஜயக்கொடி, மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் தங்கவேல், வீ எபக்ட் நிறுவனத்தின் நிதி முகாமையாளர் புவுது பெரேரா மற்றும் பிரதேச சபை வட்டார உறுப்பினர், பொருளாதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அமைப்பின் பிரதிநிதிகள், பெண்கள் கூட்டுவு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கடந்த காலங்களில் யுத்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குறைந்த குடும்ப வருமானத்தைப் பெற்றுவரும் குடும்பங்களின் பொருளாதாரத்தையும் மற்றும் அவர்களது கல்வி, சுகாதாரம் போன்றவற்றை வலுப்படுத்தும் நோக்கில் நிலைத்து நிற்கக்கூடிய திட்டமாக இத்திட்டம் வீ எபக்ட் நிறுவனத்தினூடாக காவியா பெண்கள் அமைப்பினால் செய்படுத்தப்பட்டுள்ளது.
இக் கிராமத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஓர் நிறுவனமத்தினால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலன் சார்ந்த விவசாயத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததை அவதானித்த காவியா மற்றும் வீ எபக்ட் நிறுவனங்கள் பிரதேச செயலாளரின் அனுமதிக்கமைவாக அக் காணியில் இவ் விவசாயப் பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களுவன்கேணி அலைமகள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினால் இவ் விவசாயப் பண்ணை மேற்கொள்ளப்படுவதுடன் இதனை காவியா பொண்கள் அமைப்பு கண்காணிப்பதுடன் அரச கூட்டுறவு நிறுவனம் அபிவிருத்திக்கான ஆலோசனைகளை எதிர்காலத்தில் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.