ஒரு பாலூட்டும் தாய் இன்னுமொரு கர்ப்பம் தரிக்கும் போது பிள்ளைக்கு பாலூட்டலாமா? என்ற கேள்வி எம்மிடையே எழுவதுண்டு. ஆம் எந்தவொரு பிரச்சனையுமின்றி தாய் தன் பாலை தொடர்ந்து ஊட்டலாம். பிள்ளை பிறந்த பின்னரும் இரண்டு பிள்ளைகளுக்கும் தொடர்ந்து ஊட்டலாம்.
இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் இமட்.போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டாக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஒரு சிறந்த தாய் தனது பிள்ளைக்கு பாலூட்டும் போது கொடுத்த பாலின் அளவு போதுமா பிள்ளை போதுமான அளவு குடிக்கின்றதா என்பதை எப்படி அறிந்து கொள்வாள்? ஆரம்பகாலத்தில் பிள்ளை பிறந்தவுடன் பால் சிறிதே வரும். அதனைத்தொடர்ந்து 14ம் நாள் வரும் போது போதுமான அளவு பால் சுரக்கும். அந்தப்பாலை பிள்ளைக்கு கொடுத்து மிதமிஞ்சிய பாலாக முலையிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கும்.
ஆரம்ப காலத்தில் பிள்ளைக்கு சிறிதளவு பாலே போதுமானதாகும். இதனால் பிள்ளை பால் குடித்த பின்இ முதல் 3-4 நாட்களுக்குள் ஒரு நாளைக்கு 2-3 தடவை சிறுநீர் கழிப்பது அது போதுமாகக் கருதலாம். அத்துடன் மலம் கழித்தலும் 2-3 தரம் போனால் போதுமாகக் கருதலாம். பிள்ளை பெருத்துக் கொண்டு போகும் போது அதாவது 6-7வது நாள் பிள்ளை மலம் கழிக்கும் வீதமும் கூடிக்கொண்டு போகும்இ அத்துடன் சலங்கழிக்கும் வீதமும் அதிகரிக்கும். சராசரியாக ஒருநாளைக்கு 6 தரம் சலங்கழிக்கும் போது அந்தப் பிள்ளை பால் குடிக்கும் அளவு போதுமா ஊகித்துக் கொள்ளலாம். இது ஒரு முறை.
இரண்டாவது முறையாக ஒரு முலையால் பால் கொடுக்கும் போது அடுத்த முலையால் பால் வடியும். இதுவும் தாய்க்கு ஒரு அறிகுறி பிள்ளைக்கு போதுமான அளவுக்கு பால் ஊட்டப்பட்டு கின்றது என்று.
மூன்றாவதாக பிள்ளை பால் குடித்த பின் 2-3 மணி நேரம் வரை பிள்ளைக்கு ஏவறை (டிரசடிள) எடுத்த பின் படுக்கும் போது பிள்ளை சுயாதீனமாக தூங்கியெழும்.
மேற்பட்ட 03 வழிகளிலும் இருந்து பிள்ளைக்கு கொடுக்கும் பால் போதுமானது எனும் ஊகத்திற்கு வரலாம்.
அடிக்கடி எழுப்பி பால்கொடுக்கலாமா?
சில வேளைகளில் சில தாய்மார் அடிக்கடி பிள்ளைகள எழுப்பி பால் கொடுக்க முயற்சிக்கின்றனர். அது ஒரு தேவையில்லாத விடயம். ஒரு தரம் பிள்ளை பால் குடிக்கும் பின்னர் சமீபாடடைய அதாவது இரைப்பையில் இருந்து சிறுகுடல் வரை வர 2-3 மணி நேரம் தேவைப்படுகின்றது. அதற்க பிறகு தான் பிள்ளைக்கு பால் கொடுக்க வேண்டும். இதை விடுத்து தங்கள் பிள்ளைக்கு வாய் காயும் என்றும் பசி ஏற்படும் என்றும் நீண்ட நேரம் தூங்கும் என்றும் நினைத்து செயற்படுவது பிள்ளையின் நித்திரைக்கு பாதகம் ஏற்படும். இதனால் பிள்ளை நித்திரையில்லாமல் எந்த நேரமும் பால் குடித்தவாறு இருப்பதால் தாய்க்கு அசௌகரிகமாக இருக்கின்றது. தாயின் நித்திரையையும் குழப்புகின்றது.
மேலும் பால் கொடுக்கும் போது ஒரு முலையால் கொடுங்கள். 10-15 நிமிடங்கள் கொடுத்தால் போதுமானது. 2-3 மணிக்கு பின் பாலூட்டும் போது அடுத்த முலையால் பால் கொடுப்பது சிறந்தது.
ஒரே தரத்தில் இருமுலைகளாளும் பாலூட்டுவதை தவிர்க்கவும். இவ்வாறு செய்வதால் தாயின் முலையிளுள்ள தண்ணிப் பாலே பிள்ளைக்கு போகின்றது. இதனால் பிள்ளையின் வளர்ச்சி குறைவாக காணப்படலாம். ஒரு முலையால் பால் கொடுக்கும் போதுஇ முதலில் தண்ணிப்பால் வரும்இ தொடர்ந்து வருவது கொழுப்புச் சேர்ந்த பால். இவ்வாறு பாலூட்டும் போது பிள்ளையின் வளர்த்தி சிறந்தது அமையும்.
ஒரு பிறந்த பிள்ளையின் காது கேட்கிறதா இல்லையா என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்.
ஒரு பிறந்த பிள்ளை சத்தததிற்கு திடுக்கிட்டு எழும்பினால்அல்லது கை கால்களை உதறினால் பிள்ளையின் காது கேட்கின்றது என்று உறுதி செய்கிறோம்.