வடக்கு கிழக்கின் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து காணாமல் போனவரக் ளின் சரவ் தேச தினமனா ஆகஸ்ட் 30 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஓமந்தை மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் நடாத்தவிருக்கும் போராட்டங்களில் சகல பொது மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர ;விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
ஓமந்தை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவவ்hறு தெரிவித்திருக்கும் விக்னேஸ்வரன் தனது கட்சி உறுப்பினர்கள் ஓமந்தைப் போராட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துளள்தாவது –
காணாமல் போனவரக் ளின் சரவ் தேச தினம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் காணாமல் போய ; அவர்களின் கதி என்னவென்று அவர்களின் உறவினர்களோ அல்லது சட்டப் பிரதிநிதிகளோ தெரியாமல் இருப்பவர்கள் தொடர்பில் சரவ்தேச ரீதியாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.
இலங்கையில் தமிழ ; மக்களின் உரிமைக்கான போராட்டம ; ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல ; பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்க படைகளினால் ஏராளமான தமிழ் மக்கள், சரண் அடைந்த முன்னாள் போராளிகள், மனித உரிமை செயற்பாட்டாளரக் ள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளபோதிலும,; 2009 ஆண்டு இறுதி யுத்தம் நடைபெற்ற போது பள்ளிக்கூடங்கள், வைத்தியசாலைகள் போன்ற பல்வேறு இலக்குகளுக்குக் குண்டடித்து, இராசயனப் போர்க்கருவிகள் பாவித்து இறந்தவர்கள் போக திட்டமிட்ட முறையில் பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அரசபடைகளிடம் அகப்பட்ட, சரணடைந்த
கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று கூற அரசாங்கங்கள் முன் வராது இருக்கின்றன.
இவவ்hறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை என்னவென்று தெரியாமல் கடந்த 10 வருடங்களாக பிள்ளைகளை இழந்த பெற்றோரும், பெற்றோரை இழந்த பிள்ளைகளும், தமது உடன்பிறப்புக்களை இழந்தவர்களுமாக இராணுவ முகாம்களுக்கும், பொலிஸ ;நிலையங்களுக்கும், சிறைசச்hலைகளுக்கும், தடுப்பு முகாம்களுக்கும், நீதிமன்றஙக் ளுக்கும் அலைந்து திரிந்து எமது மக்கள் களைத்துப்போய்விட்டார்கள். வீதிகளில் இறங்கி நின்று வருடக்கணக்கில் போராட்டங்களை மேற்கொண்டும் எந்தப ; பயனும் கிடைக்கவில்லை. தமது பிள்ளைகளைத் தேடி அலைந்து எந்த ஒரு பதிலும் கிடைக்காமல் எத்தனையோ தாய்மார்களும் தந்தைமார்களும் பெரும் மனச் சுமைகளுடன் கடந்த காலங்களில் இறந்துபோய ;இருக்கின்றார்கள்.
காணாமல் போனவரக்ளுக்கு என்ன நடந்தது என்று ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கமும் இதுவரையில் பதில் கூற முன்வரவில்லை. காணாமல் போனதாக கூறப்படும் எவரும் நாட்டின் எந்த சிறைகளிலும் இல்லை என்று அரசாங்கம் கூறி இருக்கின்றது. ஆனால், இறுதி யுத்தத்தில் தமது பிள்ளைகளை உயிருடன் இராணுவத்திடம் கையளித்தமைக்கான ஆதாரங்களை சாட்சிகளை வைத்துக்கொண்டே தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றார்கள் எம்மவர்கள். இவர்கள் சிறையில் இல்லை என்றால், தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த படையினரின் கையில் இல்லை என்றால் படையினர் இவர்களை என்ன செய்தனர் என்று அரசாங்கம் பதில் கூற வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பிலான நடவடிக்கைகளை கண்துடைப்பு நடவடிக்கைகளாகவும் சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவுமே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களை வடக்கு கிழக்கில் அரசாங்கம ; திறந்து வருகின்றது. ஆகவேதான், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை எமது மக்களும் நானும் ஆரம்பம் முதலே எதிர்த்துவந்தோம். இன்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் எமது இநத் அலுவலகங்களின் செயற்பாடுகள் எமது
குற்றச்சாட்டுகளை நிரூபித்துளள் ன. பல்லில்லாத பாம்புகளாகவே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்கள் காட்சியளிக்கின்றன.
ஆகவே, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையும் ஏனைய சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் காத்திரமான ஒரு தலையீட்டை மேற்கொண்டு எமது மக்களுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதற்கு நிரப்;பந்திக்க வேண்டும். அரசாங்கத்தை நம்பி இனிமேல் பயனில்லை என்ற முடிவுக்கு எமது மக்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் பொறுமை இழக்கும் நிலைக்கு தளள்ப்பட்டுவிட்டார்கள். அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் அவர்களின் துயரங்களையும் சர்வதேச சமூகம் இனிமேலும் தட்டிக்கழித்து விடக்கூடாது.
வடக்கு கிழக்கின் காணாமல் ஆக்கப்பட்ட சங்கங்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து ஆகஸ்ட் 30 திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வடக்கு கிழக்கு இணைந்த போராட்டம ;ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர.; அம்பாறை மாவட்டத்தில் கல்முனையிலும் வவுனியா மாவட்டத்தில் ஓமந்தையிலும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்கு சகல தரப்பினரும் எந்த விதமான கட்சி வேறுபாடுகளும் அரசியல் வேறுபாடுகளும் இன்றி தமது முழுமையான ஆதரவை வழங்கவேண்டும். தமிழ ; மக்கள் கூட்டணி இந்த போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குகின்றது. எனது கட்சியின் உறுப்பினர்கள் இநத்ப் போராட்டங்களில் கலந்துகொள்ள இருக்கின்றாரக்ள். எனது தனிப்பட்ட காரணங்களினால் நான் பங்குபற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன். பொதுமக்கள் அனைவரும் இநத்ப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று விநயமுடன் வேண்டுகோள் விடுக்கின்றேன்.