ம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் GEMP திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட கணிதப்பூங்கா மற்றும் கணிதமுகாம் திறந்துவைக்கும் நிகழ்வு 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிபர் க.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர் கௌரவ அதிதிகளாக பி.எம்.வை.அறபாத் நாவிதன்வெளிக்கோட்டக் கல்விப்பணிப்பாளரும் பிரதிக் கல்விப்பணிப்பாளருமான பி.பரமதயாளன், பிரதிக்கல்விப்பணிப்பாளர் எச்.நைரோஸ்கான் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா, ஆசிரிய ஆலோசகர் எஸ்.மோகன்,ஓய்வுபெற்ற அதிபர்களான என்.பிரபாகர்,கே.பேரானந்தம்,பாடசாலைஅபிவிருத்திச் சங்கச் செயலாளர் கு.மதிவண்ணன் உட்டபட பலர் கலந்து சிறப்பித்தனர்.