பேராதனை வைத்தியசாலையில் பணிபுரிந்து இப்போது மட்டக்களப்புக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற சிராஜ் என்ற வைத்தியரும் இன்னுமொரு பெண் வைத்தியரும் சுமார் 6 ஆயிரம் பெண்களை மலடாக்கியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்படி பேராதனைப் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட பெண்கள் முறைப்பாட்டைச் செய்ய முன்வரவேண்டும் எனவும் திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.