கதிர்காம பாதயாத்திரிகளுக்கு நிதி உதவி வழங்கிய சமூகசேவகருமான க.துரைநாயகம்

கதிர்காம பாதயாத்திரிகளுக்கு நிதி உதவி வழங்கிய சமூகசேவகருமான க.துரைநாயகம்
(எஸ்.சபேசன்)
கதிர்காம பாதயாத்திரிகளுக்கு குடிநீர்வழங்குவதற்காக சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் போரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அனுசரணையில் 50 ஆயிரம் ரூபாவினை இன்று சனிக்கிழமை 23 ஆம் திகதி உகந்தை முருகன் ஆலயத்தில் வைத்து லகுகல பிரதேச செயலாளர் என்.நவநீதராஜாவிடம் வழங்கிவைக்கப்பட்டது.
போரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரும் சுவிஸ் உதயத்தின் தாய்ச்சங்கத்தின் பொருளாளரும் சமூகசேவகருமான க.துரைநாயகம் அவர்களது சொந்த நிதியினை இதற்காக வழங்கி வைத்துள்ளார்
இந்நிதியினை இவ் அமைப்பின் இலங்கைக்கான பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் அதனுடைய பிரதிச் செயலாளர் ஊடகவியலாளர் சா.நடனசபேசன் அதிபர் எஸ்.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு நிதியினை வழங்கிவைத்தனர்
இந்நிகழ்வில் கிழக்குமாகாண கலாசார பணிப்பாளர்
ச.நவநீதன் ஆலய குருக்கள் சிவசிறிசீத்தாராமன் கலந்துகொண்டனர்.

வழமையாக அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி இம்முறை இதுவரை கிடையாத காரணத்தினால் பிரதேச செயலாளர் அவர்கள் பொது அமைப்புகள் தனவந்தர்கள் சமுக சேவையாளரகளிடம் உதவி கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக காட்டுப்பாதை திறக்கப்படவில்லை

ஆதலால் இம்முறை 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காட்டுப் பாதை திறக்கப்பட்டு .அதன் ஊடாக பல்லாயிரக்கணக்கான பாதயாத்திரை அடியார்கள் பயணம் செய்ய இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு வழமையாக அம்பாறை அரசாங்க அதிபரிடமிருந்து கிடைக்கும் நிதியுதவி யினால் குறித்த விடையங்களை லாகுகலை பிரதேச செயலகம் செய்து வந்தது .

நாட்டில் நிலவும் சமகால பொருளாதார நெருக்கடி காரணமாக இம்முறை அத்தகைய நிதியை பெற முடியாத சூழல் நிலவுகிறது.

எனவே பாதயாத்திரை குழுவினருக்கு இந்த வசதிகளை வழங்குவதற்காக பொது அமைப்புகள் தலைவர்கள் மற்றும் தனவந்தர்கள் உதவுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சுவிஸ் உதயம் அமைப்பு இவ் உதவியினை வழங்கிவைத்துள்ளது

Related posts