கலையை வாழ வைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணகி கலை இலக்கியக்கூடல் நடாத்தும் கண்ணகி கலை இலக்கிய தொடக்க விழா நேற்று (22) காலை 9.15 மணியளவில் கல்லடி துளசி மண்டபத்தில் பேராசிரியர் சே.யோகராசா தலைமையில்; சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய மாணிக்கம் உதயகுமார் உரையாற்றும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைத்துறைகள் பெரிதும் வளர்ச்சி அடைய முன்னுரிமை காட்டி வருகின்றது.கலாச்சார திணைக்களம் பிரதேச செயலகங்கள் மற்றும் கலை கழகங்கள் தமது பாரம்பரிய கலைகளிலும் ,கலை இலக்கியங்களிலும் மிகுந்த அக்கரை காட்டிவருகின்றன.அந்த வகையில் கண்ணகிக்கு இங்கு விழா எடுப்பதனை பாராட்டுகின்றன் என மேலும் தெரிவித்தார்.
கலை நிகழ்வுகளில் பங்கேற்ற சிறுவர்களுக்கு பாராட்டி அதிதிகளால் பரிசுகளும் சான்றுதல்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் ,மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியலாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம் ,கிழக்கு வளாக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட் தந்தை ஆ.நவரத்தினம் நவாஜீ ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.