கல்முனையில் இரண்டு புதிய கடற்படை வீரர்களுக்கு கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்கள் பாலமுனை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைத்ததாக கல்முனைப்பிராந்திய தொற்றுநோய் ப்பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் நடராசா ரமேஸ் தெரிவித்தார்.
குறித்த இருபடைவீரர்கள் அண்மையி ல் கடற்படைக்குச் சேர்த்துக்கொள் ளப்பட்டவர்கள். பயிற்சிக்கு முன்னதாக தனிமைப் படுத்தல் முகாமில் வைக்கப்பட்டு அன்ரிஜன் சோதனை செய்யப்பட்டு தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படு வது நடைமுறை.
அந்தவகையில் இவ்விரு வீரர்களும் கல்முனை கடற்படைக்குச்சொந்தமான தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டவர்கள்.பத்தாம்நாள் அன்ரிஜன் சோதனைசெய்யப்படவேண்டும் அதனிடை யில் இருமல் தடுமல் காய்ச்சல் தலைவலி வரவே அவர்களை கல்முனை ஆதாரவைத் தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அங்கு அன்ரிஜன் சோதனை செய்யப்பட்டபோது இருவருககும் கொரொனாத்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனையடுத்து 35 மற்றும் 31வயதுடைய இருபடைவீரர்களும் பாலமுனை சிகிச்சைநிலையத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்குமுன்னர் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த ஒரு புதிய கடற்படைவீரருக்கும் இதேபோன்று தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.