கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னோடி நடவடிக்கைகளில் ஒன்றான பணிப்பாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஊடக மற்றும் ஆய்வு, அபிவிருத்திக்கான பிரிவு பல்வேறு வேலைத்தி ட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக ஊடகப்பிரிவின் தயாரிப்பில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட ”தடுப்பியல்” குறுந்திரைப்படம், அண்மையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர்கூடத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பளார் டொக்டர் எம்.பி.ஏ.வாஜித், திட்டமிடல் பிரிவு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர். தொற்று நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சி.எம்.பஸால் CERI நிறுவனத்தின் பணிப்பாளர் வீ.ஐ.தர்ஷன் மற்றும் சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோய் பிரிவு மற்றும் ஊடகப்பிரிவு ஆகியன இணைந்து தயாரித்த குறித்த திரைப்படமானது, கொரோனா தொற்று மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போது சுகாதாரத்துறையினரின் பங்களிப்புக்களை மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறந்ததொரு ஆவணமாகக் கருதப்படும் தடுப்பியல் குறுந்திரைப்படமானது யுனிசெப் (UNICEF) மற்றும் செரி (Cheri) ஆகிய நிறுவனங்களின் பூரண அனுசரனையுடன் தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.