கல்முனை பிராந்தியத்தில் இன்று முதல் 50ஆயிரம் தடுப்பூசிகள் !

அனைவராலும்கடந்தசில வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த கல்முனைப் பிராந்தியத்திற்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று சனிக்கிழமை (24) முதல் ஆரம்பிக்கப்படும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.குண. சுகுணன் தெரிவித்தார்.
 
இதற்கென 50ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் (24) முதல் சகல 13சுகாதாரப்பிரிவுகளிலும் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
கல்முனைப்பிராந்தியத்திலுள்ள  13 சுகாதாரவைத்தியஅதிகாரிகள் பிரிவுகளிலுள்ள 07ஆதாரவைத்தியசாலைகளிலும் 13 பிரதேச வைத்தியசாலைகளிலும் சுகாதாரப்பிரிவினர் ஏற்படுத்தும் பாடசாலைகள் போன்ற விசேடமையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும்.
 
நாளை வைத்தியசாலைகளில் 60வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் பாலூட்டும் தாய்மாhர்கள் போன்றோருக்கு முதலில் ஏற்ப்படவிருக்கின்றன.
முதற்கட்டமாக 30வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இத்தடுப்பூசி வழங்கப்படும்.
மேலும் தெரிவிக்கையில்….
 
முன் ஏற்பாட்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 30வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதாரஅலுவலகங்களில் பணியாற்றுவோர் வீட்டிலிருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கின்றன.
அதேவேளை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கிழக்குமாகாணமெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
 
வைத்தியசாலைகள் சுகாதாரஅலுவலகங்கள் குறித்த நிலையங்கள் போன்றவற்றில் அவை வழங்கப்படவிருக்கின்றன. அந்தந்த சுகாதாரவைத்தியஅதிகாரிகள பொதுசுகாதாரபரிசோதகர்கள் சுகாதார உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொண்டு அவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

Related posts