உலக நீரழிவு தினம் (14) நாட்டின் பல பகுதிகளிலும் அனுஸ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசலை ஏற்பாடு செய்த மாபெரும் விழிப்புணர்வு ஊழ்வலம் (14) கல்முனை நகரில் நடைபெற்றது.
வைத்திய சாலையின் முன்றலில் ஆரம்பமான” நீரழிவுடன் சுக வாழ்வு” எனும் விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் பிரதான வீதிஊடக சென்று கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக வீதி வழியாக மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.
இதன் போது நிரழிவு நோயை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை ஊருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி வீதி நடனம் இடம் பெற்றது. நீரழிவு நோயை அறியக்கூடிய அறிகுறிகள், நீரழிவு நோயால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள், இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றிய துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு என வைத்தியசாலையில் விசேட முகாமைத்துவ நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த நிலையத்திற்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்தனர்.
பாண்டிருப்பு சென்ரேனியல் ஸ்ராஸ் லயன்ஸ் கிளப் , சமூக அமைப்புக்கள், மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் நிருவாகத்தினர் என பெரும் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.