கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமிறக்கம் செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை-பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிப்பு.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமிறக்கம் செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும்,அதனை ஒரு முழுமையான பிரதேச செயலகமாக செயல்படுத்தக் கூடிய அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும், உரிய அதிகாரிகளுக்கும் அவ்விடத்திலே ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதோடு ,ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ,பஷில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவிப்பு.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமிறக்கம் செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும்,அத்துடன் அதனை ஒரு முழுமையான பிரதேச செயலகமாக செயல்படுத்தக் கூடிய அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும், உரிய அதிகாரிகளுக்கும் அவ்விடத்திலே ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதோடு என்னிடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, மற்றும் பஷில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான  விரிவான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை(30)கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை(30)அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பசில் ராஜபக்ஷ   அவர்களை தனித்தனியாக சந்தித்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சனைகளை  விரிவாக கலந்துரையாடி இருந்தோம்.

இதனடிப்படியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற பசில் ராஜபக்ஷ அவர்களுடனான  முக்கிய சந்திப்பொன்றில்  கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பாக மிக முக்கியமான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். இக்கலந்துரையாடலில் கல்முனை தமிழ் பிரதேச செயலகமானது கல்முனை தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதனையும், அது  இனவாத அரசியலுக்கு இரையாகி தரமிறக்கம் செய்யும் நடவடிக்கையானது அப்பகுதி தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என்பதனையும், அண்மையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றின் பிரகாரம் அப்பிரதேச செயலகத்தினை  தரமிறக்கம் செய்யும்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதனையும்,பசில் ராஜபக்ஷ  அவர்களின்  கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்திய பசில் ராஜபக்ஷ அவர்கள் தமிழ்  மக்களின் அடிப்படை உரிமை விடயத்தில் அரசாங்கம் எந்தவித  விட்டுக் கொடுப்பையும்  செய்யப் போவதில்லை எனவும், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வழங்கிய உறுதி மொழிகளின் அடிப்படையில் அது ஒரு  முழுமையான செயலகமாக  தரமுயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும் எனவும், அத்துடன் ஒரு முழுமையான கணக்காளர் அப் பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டு அப் பிரதேச செயலகம்  முழுமையாக செயற்பட அனைத்து வழிமுறைகளையும் செய்து தருவதாக உறுதிமொழி வழங்கினார். அது தொடர்பான சில ஆலோசனைகளை அவர் அவ்விடத்திலிருந்தே குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

பின்னர்  இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுவினுடைய தலைவர்களுடனான சந்திப்பின்போதும்  இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் பிரஸ்தாபிதிருந்தோம்.இது தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பில்  குறிப்பிட்ட அமைச்சருக்கும் மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு வந்து கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமிறக்கம் செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும்  அத்துடன் அதனை ஒரு முழுமையான பிரதேச செயலகமாக செயல்படுத்தக் கூடிய அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும்  உரிய அதிகாரிகளுக்கும் அவ்விடத்திலே பணிப்புரை வழங்கினார்.

இது தொடர்பில்  நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது நாம்  கௌரவ சமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சின் செயலாளரை சந்தித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் எனத்தெரிவித்தார்.

Related posts