கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் உள்ளிட்ட 153அரசஊழியர்க்கு அன்ரிஜன்! முடிவு

கல்முனை வடக்கு பிரதேசசெயகத்தில் நேற்று(8) வெள்ளிக்கிழமை கொரோனவுக்கான அன்ரிஜன் சோதனை நடாத்தப்பட்டது.
 
கல்முனை வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான சுகாதாரக்குழுவினர் இச்சோதனையைச் செய்தனர்.
 
முதலில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் அன்ரிஜன் பரிசோதனைக்கு முன்வந்து மேற்கொள்ள ஏனைய 152 அரச உத்தியோகத்தர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
 
சோதனைக்குட்படுத்தப்பட்ட 153 அரச ஊழியர்கள் யாருக்கும் தொற்றுறுதி உறுதிசெய்யப்படவில்லை. நெகட்டிவ் பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது.

Related posts