வெளியான தரம்5புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்முனை வலயத்தில் இம்முறை 376மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர் என கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் செல்லத்துரை புவனேந்திரன் தெரிவித்தார்.
கல்முனை தமிழ்க்கோட்டத்தில் 114பேரும் கல்முனை முஸ்லிம்கோட்டத்தில் 109பேரும் சாய்ந்தமருதுக்கோட்டத்தில் 60பேரும் நிந்தவூர்க்கோட்டத்தில் 56பேரும் காரைதீவுக் கோட்டத்தில் 37பேரும் சித்தியடைந்துள்ளனர்.
கல்முனை வலயத்தில் தனியொரு பாடசாலை அதிகூடிய சித்திகளைப் பெற்றதென்றால் அது கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை ஆகும்.அங்கு 87மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். அதிகூடிய புள்ளியாக 186புள்ளி பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வலயத்தில் அதிகூடிய உச்சப்புள்ளி 190 பதிவாகியுள்ளது. அது சாய்ந்தமருதுக்கோட்டத்திலுள்ள சாய்ந்தமருது அல்ஹிலால் மகா வித்தியாலய மாணவரொருவர் பெற்றுள்ளார்.
இம்முறை கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் அதிகமான மாணவர்கள் சித்தியடைந்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட மாணவர் ஆசிரியர் அதிபர்கள் கல்விசார் குழாத்தினர் அனைவருக்கும் பாராட்டுத்தெரிவிப்பதாகவும் அவர்மேலும் தெரிவித்தார்.