மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியானது வியாழக்கிழமை(24.1.2018)பிற்பகல் 2.30 மணியளவில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் அதிபர் திருமதி. பிரபாகரி இராஜகோபாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராசா-சரவணபவனும்,கௌரவ அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் வே.மயில்வாகனமும்,விசேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் க.அருட்பிரகாசம்,கல்லடி பேச்சியம்மன் சித்திவிநாயகர் ஆலய முகாமையாளர் நவசிவாயம் ஹரிதாஸ்,பிரதி அதிபர்களான வீ.அமிர்தலிங்கம்,திருமதி.பவளசாந்தி பிறேமகுமார்,உதவி அதிபர் திருமதி.சாந்தி சிவலிங்கம்,ஆசிரியர்களான திருமதி.நித்தியகலா சிவநாதன்,திருமதி.வசந்தா குமாரசாமி,திருமதி.சுசாந்தினி சிவநாதன்,திருமதி.டிலாணி ராஜ்குமார்,ரீ.அருள்தாசன்,கே.சரவணபவன்,திருமதி.ரீ.ராஜதுரை,திருமதி.ஜெயலட்சுமி நரேந்திரன்,சீ.டீ.குணநாதன்,திருமதி.ரீ.ஸ்ரீகுகன்,திருமதி.ஜெயந்தி சிவபாதம்,ஜீ.ரவிச்சந்திரன்,திருமதி.சுகந்தி சுதர்சன்,கே.ரஞ்சித் நிமால்,என்.இதயராஜன் உட்பட ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள், மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
இதன்போது அதிதிகளை மலர்மாலை அணிவித்து,திலகமிட்டு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.கொடிகள் ஏற்றப்பட்டு, தேசியகீதம் இசைக்கப்பட்டது.விளையாட்டு வீராங்கனைகள் விளையாட்டுதீபம் ஏற்றப்பட்டும், சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டும் அபவாமியா,நிவேதிதா,சாரதா போன்ற இல்லங்களுக்கிடையில் விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பமானது.
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் நீளம் பாய்தல்,முப்பாய்ச்சல்,உயரம் பாய்தல்,தடைதாண்டல்,குண்டெறிதல்,பரிதிவட்டம் வீசுதல்,அணிநடை,உட்பட பல மைதான சுவட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
முதலாம் இடத்தை அபவாமியா(நீலம்) இல்லமும்,இரண்டாம் இடத்தை நிவேதிதா(சிகப்பு)இல்லமும்,மூன்றாம் இடத்தை சாரதா(பச்சை)இல்லமும் புள்ளி அடிப்படையில் நிரல்படுத்தப்பட்டது.இந்த வருடத்திற்கான சம்பியன் கிண்ணத்தை அபவாமியா இல்லம் வசமாக்கியது. தலைமையுரை,அதிதிகள் உரை,பரிசளிப்புகள் இடம்பெற்றது.
விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி முதல் மூன்று இடங்களை தட்டிக்கொண்ட விளையாட்டு வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும்,கேடயங்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.கல்லூரியில் விளையாட்டுப்போட்டியில் தன்னை அர்ப்பணித்து,முழுமையான நேரத்தையும் விளையாட்டுக்காக பயன்படுத்தி சிறந்த விளையாட்டு வீரர்களை உத்வேகத்துடன் உருவாக்கி அவர்களை கோட்டமட்டம்,வலயமட்டம்,மாகாண மட்டம்,தேசியமட்டத்துக்கு அகலப்படுத்தி வெற்றிச் செய்திகளை கல்லூரிக்கு சுவீகரித்து கொடுக்கும் உடற்கல்வி ஆசிரியை திருமதி. கிரிசாந்தி நிமலன் அவர்களின் சரியான திட்டமிடலுடன் இவ்வருட வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது சிறப்பாக நடைபெற்று உடற்கல்வி ஆசிரியையின் நன்றியுரையுடன் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி முற்றுப்பெற்றது.