களுவாங்சிகுடி நியூ ஒலும்பிக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் டெங்கொழிப்பு

களுவாங்சிகுடி நியூ ஒலும்பிக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் டெங்கொழிப்பு செயற்றிட்டம் ஒன்று  களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த டெக்கொழிப்பு செயற்றிட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அததிகாரி கிருஷ்ணகுமார், தலைமையிலான பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் தலைமையிலான வைத்தியசாலை குழுவினர், பிரதேச சபை உறுப்பினர் தலைமையிலான பிரதேச சபை  ஊழியர்களை கொண்ட குழுவினர், அம்கோணர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தலைமையிலான குழுவினர் நியூ ஒலும்பிக் விளையாட்டு கழத்தின் தலைவர் புருசோத்மன் தலைமையிலான கழக உறுப்பினர்கள் என பலரும் குறித்த டெங்கொழிப்பு பணியில் பங்குபற்றியிருந்தனர்.
இதன் போது அனைவரும் ஒன்றிணைந்து  வீடுகள், ஆலயங்கள், முன்பள்ளி பாலர் பாடசாலைகள், போன்றவற்றில் அமையப் பெற்ற கிணறுகள் சோதனை நடாத்தப்பட்டு நுளம்பு உருவாகக்கூடிய கிணறுகளுகளை இனங்கண்டு அதனை தடுக்கும் முகமாக பாதுகாப்பாக மூடுவதற்கு  அம்கோணர் நிறுவனத்தினர் வலைகளை அன்பளிப்பு செய்திருந்ததுடன் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினரால் கிணறுகளுக்குள் விடுவதற்கான மீன் குஞ்சுகளையும் இதன் போது வழங்கியிருந்தனர். இந் நடவடிக்கையின்  போது நூற்றுக்கணக்கான இடங்கள் சோதனை நடாத்தப்பட்டு டெங்கு நூளம்பின் உருவாக்கத்தினை தடுப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 

?
?

Related posts