இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளா் சி.பிரகாஷும் மற்றும் கிழக்கு பல்கலை கழக சிரேஸ்ட உதவி நூலகர் எம்.என் ரவிக்குமார்,களுதாவளை பிரதேச சபைச்செயலாளர் கே.லெட்சுமிகாந்தன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.குகநேசன்,களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலய அதிபர் ந.நடேசன்,நூலக பொறுப்பாளர்களான திருமதி ஸ்ரீதாரணி சுதன்,கி.நிலக்ஸன் ,மாணவர்கள், வாசகவட்டத்தினர் கலந்துகொண்டார்கள்.
களுவாஞ்சிகுடி வாசகர் வட்டத்தினால் கோர்ப்புச் செய்யப்பட்ட “வஞ்சி சிறுவர் சஞ்சிகை” உத்தியோகபூர்வமாக உள்ளுராட்சி உதவி ஆணையாளரினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.வாசிப்பு மாதத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி கிராமத்தில் உள்ள பாடசாலையில் கல்வியை புகட்டும் மாணவர்களுக்கிடையே தேசிய வாசிப்புமாத போட்டிகள் நூலகத்தினால் நாடாத்தப்பட்டது.இதன்போது போட்டியில் வெற்றிபெற்று தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு பரிசுகளும்,சான்றீதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.களுவாஞ்சிகுடி பொதுநூலகத்தை இலத்திரணியல் நூலகமாக மாற்றியமைப்பதற்காக முன்னின்று செயற்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நூலகரை வாசகர்வட்டம் பொன்னாடை போற்றியும்,ஞாபகார்த்த சின்னமும் வழங்கியும் கௌரவித்தது.