காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் உறுதி வழங்கும் நிகழ்வு காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட உறுதி வழங்கும் முதற்கட்ட நிகழ்வானது களுதாவளை பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட காணிச்சீர்திருத்த அதிகாரசபை பணிப்பாளர் திரு.நே.விமலராஜ் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதீதிகளாக திரு.நிஹால் விஜேதுங்க, செயற்திட்ட பணிப்பாளர் தலைமை அலுவலகம் காணிச்சீர்திருத்த ஆணைக்குழு மற்றும் திரு. துசார வன்னிநாயக்க, பணிப்பாளர் நில அளவை தலைமை அலுவலகம் காணிச்சீர்திருத்த ஆணைக்குழு , மற்றும் களுதாவளை கிராம சேவையாளர் கிராம தலைவர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் முதற்கட்டமாக உறுதி வழங்கி வைக்கப்பட்டதுடன் மூன்று மாதகாலத்திற்ள் சுமார் 1000 உறுதி வழங்கும் நிகழ்வு இதே மண்டபத்தில் மிக விரைவில் தவிசாளர் தலைமையில் நடைபெறும் எனவும் மாவட்ட பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது. இவ் உறுதி வழங்களானது மாவட்ட பணிப்பாளரின் நீண்ட பிரயத்தனத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...