காரைதீவிலிருந்து முதலாவது கல்வித்துறை பேராசிரியராக கலாநிதி அருள்மொழி தெரிவு!

கிழக்குப்பல்கலைக்கழக கல்வி பிள்ளைநலத்துறைதலைவர் கலாநிதி செ.அருள்மொழி, கல்வித்துறைப் பேராசிரியராக நேற்று நடைபெற்ற பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் இறுதித்தேர்வின் மூலமாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
 
கிழக்கு மாகாணத்தில் கல்வியில் கலாநிதிப்பட்டம் பெற்று, பேராசிரியராக பதவி உயர்த்தப்படும் முதலாவது தமிழராக பேராசிரியர் அருள்மொழி திகழ்கிறார்.

 

 
காரைதீவைச் சேர்ந்த செல்லையா (காலஞ்சென்ற ஓய்வுநிலைஅதிபர்) கனகம்மா (காலஞ்சென்ற ஓய்வுநிலை ஆசிரியை) தம்பதியினரின் 2ஆவது புத்திரனாவார். காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி அதிபராக சிறப்பான பணியாற்றிவராவார்.
 
காரைதீவில் முதலாவது பேராசிரியராக உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளார் தெரிவாகியிருந்தார். அதன்பின்னர் தமிழ்த்துறைப்பேராசிரியர் பொ.பாலசுந்தரம், புள்ளிவிபரவியல் பேராசிரியர் செ.இளங்குமரன், விவசாயத்துறைப்பேராசிரியர் எஸ்.சுதர்சன் ஆகியோர் தெரிவாகியிருந்தனர். எனவே காரைதீவின் ஜந்தாவது பேராசிரியராகவும் ,கல்வித்துறையின் முதலாவது பேராசிரியராகவும் பேராசிரியர் செ.அருள்மொழி தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
அவர் ஆசிரியராக ,அதிபராக ,உதவிபிரதிக் கல்விப்பணிப்பாளராக, விரிவுரையாளராக, சிரேஷ்ட விரிவுரையாளராக ,துறைத்தலைவராக பல்வேறு பதவிகளை வகித்து தற்போது கல்வித்துறைப்பேராசிரியராக  பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
 
கிழக்கு மாகாணத்தில் கல்வியில் கலாநிதிப்பட்டம் பெற்று, பேராசிரியராக பதவி உயர்த்தப்படும் முதலாவது தமிழராக இவர் திகழ்கின்றமை காரைதீவு மக்களுக்கு கிடைத்த பெருமையாகும். இவரது சேவை கல்வி சமூகத்திற்கு மென்மேலும் கிடைக்கவேண்டும் என சமுகவலைத்தளங்களில் பாராட்டுமழை பொழியப்பட்டுவருகிறது. அவரது பதவியுர்வுக்காக கல்விச் சமூகம் அவரை மனமார வாழ்த்துகின்றது.

Related posts