இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான 100 மாதிரி நூலகம் அமைக்கும் தேசிய செயற்றிட்டத்தின்கீழ், முன் மாதிரியான அறநெறி நூலக அங்குரார்ப்பண வைபவம் நேற்று(16)செவ்வாய்க்கிழமை காரைதீவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் காரைதீவு விபுலாநந்தா மணி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் துணைமேலாளர் ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் கலந்துசிறப்பித்தார்.கெளரவ அதிதியாக அம்பாறைமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன் கலந்துசிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளக ரி.ஜே.அதிசயராஜ் (பிரதேச செயலாளர் – கல்முனை வடக்கு) ,ந.நவநீதராஜா(பிரதேச செயலாளர் – லாகுகல) ,எஸ்.எம்..ஹனீபா(பிரதேச செயலாளர் – சம்மாந்துறை.) ,ஆ.சஞ்சீவன்(பிரதிக்கல்விப்பணி ப்பாளர் கல்முனை) ,சோ.ஸுரநுதன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருக்கோவில்) ,வி.ரி. சகாதேவராஜா(உதவிக் கல்விப் பணிப்பாளர் சம்மாந்துறை) ,வெ.ஜெயநாதன் (தலைவர் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம் காரைதீவு) ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
ஆன்மீக அதிதிகளாக சிவாச்சார்யகளான சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரககுருக்கள், சிவஸ்ரீ சாந்தருபன் ஜயா ஆகியோர் கலந்தகொண்டு ஆசிவழங்கினர்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வினை, அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.பிரதாப் தொகுத்துவழங்கினார்.
விழாவில் நந்திக் கொடியேற்றம் , சுவாமி விபுலாநந்தர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தல் புஸ்பாஞ்சலி தினசரி நூலகம் – அங்குரார்ப்பணம் இந்து சமய அறநெறிப் பாடசாலைகளுக்கான முன்மாதிரி நூலக – அங்குரார்ப்பண நிகழ்வும் கண்காட்சியும் , அறநெறிப் பாடசாலை நூலகத்திற்கான நூல்கள் வழங்குதல் , அறநெறிச் சாரம் வானொலி நிகழ்வில் ஆக்கத்திறன் ஆளுமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு நூல்கள் வழங்குதல் , அறநெறிச்சார வானொலி நிகழ்வில் மாணவ நேயராகப் பங்குபற்றி விடை எழுதிய மாணவர்களுக்கு நூல் வழங்குதல் என்பன நடைபெற்றன.
காரைதீவு இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சிவலோஜினி நன்றியுரையாற்றினார்.