காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு (23) அன்ரிஜன் சோதனை செய்யப்பட்டது. அதன்போது அவருக்கு தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீரின் ஏற்பாட்டில் தலைமை பொதுச்சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு பொதுச்சுகாதாரபரிசோதகர் எ.ஜெமீல் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போது இது(நெகடிவ்) உறுதிசெய்யப்பட்டது.
மக்கள் பிரதிநிதியாகிய அவர் பல இடங்களுக்கும் சென்று வருவதால் அவராகவே சுகாதார சட்டவிதிமுறைகளுக்கமைவாக தன்னை அன்ரிஜன் சோதனைக்குட்படுத்துமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இச்சோதனை (23) அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்டது.
பொது மக்கள் சுகாதாரத்துறையினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் கொரோனாவை எம்மத்தியிலிருந்து விரட்ட முடியும். மக்கள் முகக்கவசத்தை எந்நேரமும் அணியுமாறும் வீட்டிலேயே தங்குமாறும் தவிசாளர் ஜெயசிறில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்பும் பிரதேசசபையில் இத்தகைய அன்ரிஜன் மற்றும் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது தவிசாளருக்கு நெகடிவ் பெறுபேறு கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.