கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை – நிலாவெளி காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை அவசர அழைப்பு இலக்கமான 119க்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து காவற்துறையினர் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், சடலத்தை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் கட்டளையிட்டார்.

Related posts