கிழக்கில் முதலிரு அலைகளில் 26பேர் பலியாகியிருந்தனர். ஆனால் மூன்றாவது அலையில் அத்தொகை கிட்டத்தட்ட 5மடங்காக அதிகரித்து இதுவரை 126பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் இதுவரை 152பேர் மரணித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 89பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் 17 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 31 பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 15 பேரும் மரணித்துள்ளனர்.
கடந்த ஒருவாரகாலத்தில் கிழக்கில் பலியான 26பேரில் 17பேர் திருமலை மாவட்டத்தைச் சேர்ந்தோராவார்.
கல்முனைப்பிராந்தியத்திலுள்ள மருதமுனை கொவிட் சிகிச்சை வைத்தியசாலையில் முதலாவது மரணம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த 63வயதான தாயொருவர் இவ்விதம் மரணித்துள்ளார். அந்தத்தாயின் கணவரும் ஒரேமகனும் பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அவரது பிரேதம் உருக்கமானதொரு சம்பவத்துடன் அம்பாறையிலுள்ள எரியூட்டல் நிலையத்தில் எரிக்கப்பட்டது.
இந்நிலையில் கிழக்கிலங்கைவாழ் பொதுமக்கள் பயணத்தடையை பூரணமாகக்டைப்பிடிக்கும் அதேவேளை சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகப்பேணி மேலதிக இழப்புகளை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகதாரத்துறையினர் கேட்டுக்கொண்டிருக்னின்றனர்.
கிழக்கில் கொரொனா மரணங்கள் 150ஜத் தாண்டியுள்ளன!முதலிருஅலைகளைவிட 3வது அலையில்5மடங்காக அதிகரிப்பு!மக்கள் எச்சரிக்கையாயிருக்குமாறு சுகாதாரத்துறை வலியுறுத்து.
கிழக்குமாகாணத்தில் சமகால கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 150ஜத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தமாக 152பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.