கிழக்கு மாகாணத்தில் இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும்சமய பாடங்களில் மாகாண பொதுப்பரீட்சைகள் நடைபெறுகின்றன.
நேற்று தமிழ்பாடப்பரீட்சை நடைபெற்றது. இன்று சமயப்பாடம் நடைபெறும்.
நேற்று(21) ஆரம்பமான இப்பரீட்சை இன்றும்(22) நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:இலங்கையிலுள்ள மாகாணங்களில் கிழக்கு சா.தர. கல்விஅடைவுமட்டத்தில் 9ஆம்தரத்திலிருப்பதாக கடந்தபலஆண்டுகளாக கூறிவருகிறார்கள்.அதனை 7ம்தரத்திற்கு கொண்டுவரவேண்டுமானால் மேலும் 600 சி தர திறமைச்சித்திகளைப்பெறவேண்டும். அதற்காக அதிபர்கள்ஆசிரியர்கள்மாணவர்கள் வலயங்கள் இம்முறை உழைக்கவேண்டும்.
கூடைப்பாடங்களைப்பொறுத்தவரை கிழக்கில் திருப்திகரமான நிலை நிலவுகிறது. எனவே மாகாணத்தின் ஏற்பாட்டில் தமிழ் மற்றும் சமய பாடங்களில் மாகாண பொதுப்பரீட்சைதேர்தல் முடிந்த கையோடு சகல வலயங்களிலும் க.பொ.த.சா.த மாணவர்களுக்கு நடாத்தத்திட்டமிட்டு தற்போது நடைபெறுகிறது.
பரீட்சைமுடிந்தகையோடு விடைத்தாள்திருத்துவதற்கு ஏதுவாக விடையளிக்கும் புள்ளியிடல்திட்டமும்அனுப்பிவை க்கப்படும் என்றார்