தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிற்றுக்கிழமை (04) நாடெங்கிலும் அமைக்கப்பட்டிருந்த 2995 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.
இம்முறை மொத்தமாக 3 இலட்சத்து 39 ஆயிரத்து 360 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்ற விண்ணப்பித்திருந்ததாக பரீட்சை ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித அறிவித்திருந்தார்.
முதலாவது வினாப்பத்திரம் காலை 9.30 இல் இருந்து 10.15 மணி வரையும் இரண்டாவது வினாப்பத்திரம் காலை 10.45 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரையும் வழங்கப்பட்டு மாணவர்கள் இரண்டு மணித்தியால சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அத்துடன் கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலத்தியாலயம் கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மருதமுனை அல்மனார் பாடசாலைகளில் உள்ள பரீட்சை நிலையத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றுவதற்கு பெற்றோர்கள் வழியனுப்பி வைத்தனர்.
இம்முறை இப்பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இதன்படி குறித்த பரீட்சைக்கு சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55529 மாணவர்களும் தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதற்காக 2995 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நாளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இம்மாதம் 31ஆம் திகதி வரை இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.