கிழக்கு மாகாணத்தில் கடந்த 12மணிநேரத்தில் 42பேருக்கு கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்தகாலத்தோடு ஒப்பிடுகையில் அண்மைக்காலமாக தொற்றுக்களின் வேகம் குறைவடைந்துவந்தது. ஆனால் கடந்த 12மணிநேரத்துள் திடீரென தொற்றின்வேகம் கூடியுள்ளது.
குறிப்பாக அதிகூடியதாக மட்டக்களப்பில் 10பேரும் காத்ததான்குடியில் 7பேரும் ஏறாவுர் மற்றும் கல்முனைவடக்கில் தலா 06பேரும் தமனயில் 05பேரும்அம்பாறையில் 04பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கிழக்கில் கொரோனாத்தொற்றுக்களின் எண்ணிக்கை 3000ஜ தாண்டியுள்ளது.அங்கு நேற்றையதினம்(02) செவ்வாய்க்கிழமை 3018 ஆகியது.அதேவேளை கல்முனைப்பிராந்தியம் 1394 ஆக உயர்ந்தது.
எனினும் கிழக்கில் தற்போது ஆக 149பேரே எட்டு வைத்தியசாலைகளிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை கல்முனை பிராந்தியத்தில் 1394பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 753பேரும் திருமலை மாவட்டத்தில் 571 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 277பேருமாக 2995பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
மேலும் வெளிநாடு மினுவாங்கொட கந்தக்காடுகொத்தணி வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.
22மரணங்கள்!
இதுவரை கிழக்கில் சம்மாந்துறை ஒலுவில் சாய்ந்தமருது அட்டாளைச்சேனை வவுணதீவு காத்தான்குடி நாவிதன்வெளி ஆலையடிவேம்பு அம்பாறை உகனை காத்தான்குடி கிண்ணியா ஏறாவூர்மற்றும் மட்டக்களப்பிலுமாக மொத்தம் 22 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
அதிகூடிய 04மரணங்கள் அட்டாளைச்சேனையில்; சம்பவித்துள்ளது.அடுத்து காத்தான்குடி சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் தலா 3மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
கல்முனைப்பிராந்தியத்தில் 11பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 07பேரும் அம்பாறைப்பிராந்தியத்தில் மூவரும் திருமலையில் ஒருவருமாக இந்த 21 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
இதுவரை கிழக்கிலுள்ள 08 கொரோனா வைத்தியசாலைகளில் 4288 தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 4114பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். தற்போது ஆக 149பேரே எட்டு வைத்தியசாலைகளிலும் உள்ளனர். அங்கு 697 கட்டில்கள் காலியாகவுள்ளன.25பேர் மாத்திரமே மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுஇவ்வாறிருக்க 28523பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை 66045பேர் அன்ரிஜன் பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் .
இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.