கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தீநுண்மியின் தாக்கத்திகனால் உயிhழந்தவர்களின் எண்ணிக்கை 300ஜத் தாண்டியுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார சேவை த்திணைக்களம் அறிவித்துள்ளது.
அங்கு நேற்று(12) திங்கட்கிழமை வரை 301 பேர் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். இவர்களில் 275பேர் மூன்றாவது அலையில் மரணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இறுதியாக கல்முனை தெற்கு மற்றும் அக்கரைப்பற்றுப்பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் இருவர் மரணித்துள்ளனர்.
இதேவேளை தொற்றுக்களின் எண்ணிக்கை 16ஆயிரத்தை கடந்ந்துள்ளது. நேற்று(12)வரை 16431பேருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.இவர்களில் 15516பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர்.618பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். நேற்று ஆக 75பேருக்கு மாத்திரமே தொற்று இணங்காணப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்திற்கென வழங்கப்பட்ட 75ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகளில் 74ஆயிரத்து 901ஊசிகள் நேற்று (12)வெள்ளி வரை ஏற்றப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண சுகாதாரதிணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
மட்டு.மாவட்டத்தில் 24995பேருக்கும் அம்பாறை பிராந்தியத்தில் 24991 பேருக்கும் திருமலை மாவட்டத்தில் 24915பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.
கல்முனை புறக்கணிப்பு!
கல்முனைப்பிராந்தியத்திற்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று திங்கட்கிழமை(12) முதல் ஆரம்பிக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் முன்பு கூறியிருந்தபோதிலும் இதுவரை அதற்கான சமிக்ஞைகள் எதனையும் காணவில்லை.
இதுதொடர்பில் கிழக்கு மாகாண சுகாதாரதிணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக்கிடம் கேட்டபோது இதுவரை மத்தியஅமைச்சிலிருந்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மாத இறுதியில் கிடைக்கப்பெறலாம். அவ்வாறு கிடைக்கும்பட்சத்தி;ல் உடனடியாக அவற்றை வழங்க தயார்நிலையிலுள்ளோம் என்று பதிலளித்தார்.
அதற்கான முன்னாயத்தவேலைகள் சகல சுகாதாரப்பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அங்கு 60வயதுக்கு மேற்பட்டோர் கர்ப்பிணித்தாய்மார்கள் தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதாரஅலுவலகங்களில் பணியாற்றுவோர் வீட்டிலிருக்கும் நெருங்கிய உறவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கின்றன.
வைத்தியசாலைகள் சுகாதாரஅலுவலகங்கள் குறித்த நிலையங்கள் போன்றவற்றில் அவை வழங்கப்படவிருக்கின்றன. அந்தந்த சுகாதாரவைத்தியஅதிகாரிகள பொதுசுகாதாரபரிசோதகர்கள் கிராமசேவையாளருடன் தொடர்புகொண்டு அவற்றை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரைகாலமும் கிழக்கில் அன்ரிஜன் பிசிஆர் என 1லட்சத்து 52ஆயிரத்து 025பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.