கிழக்குமாகாண ஆளுநர் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளும் ஆசிரியர் இடமாற்றத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கான கட்டாய இடமாற்றம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிழக்குமாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டத்திற்கு கட்டாயம் இடமாற்றம் பெற்றுச் செல்லவேண்டும் என கிழக்குமாகாண ஆளுநர் அறிவித்துள்ளமை சட்டநியாயாதிக்கத்திற்கு முரணான செயற்பாடாகவுள்ளது
அவர் மேலும் தெரிவிக்கையில் கல்வி அமைச்சினுடைய சுற்றுநிருபத்தின் படி தரம் 1,2 இல் ஒரு ஆசிரியரும், தரம் 3,4 இல் ஒரு ஆசிரியரும் கற்பிக்கவேண்டும். இந்த நிலையில் இவ்வாறான இடமாற்றம் நடைபெறுவதனால் ஆரம்பக்கல்வியின் நிலைமை பெரிதும் மோசமான நிலையினை அடையும் கல்வி அமைச்சினுடைய சுற்றுநிருபமும் மாணவர்களது உரிமையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
கிழக்குமாகாணத்தில் அதிகமாக ஆரம்பக்கல்வி வீழ்ச்சிகண்டு இருக்கின்றது. அதாவது கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் வெளிவலயங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர் இவர்களை கட்டாயமாக ஆளுநர் தான் நினைத்தபடி இடமாற்றம் செய்வது சட்ட நியாயாதிக்கத்திற்கு முரணாகச் செயற்படுகின்றார்.
இவ்வாறு இடமாற்றம் செய்வதனால் வகை 3 ஐச் சேர்ந்த அரம்பக்கல்வியில் இருக்கும் அதிகமான பாடசாலைகள் மூடும் நிலை ஏற்படுத்தக்கூடும் .அதாவது அருகில் உள்ளபாடசாலை சிறந்தபாடசாலை என்பது சகல வளங்களையும் கொண்டதாக அமையவேண்டும் ஆனால் ஆளுநர் அவர்கள் ஆசிரியர் வளங்களை சில பகுதிகளுக்கு கிடைக்காமல் இடமாற்றம் செய்வதனால் அத்திட்டம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் மத்திய அரசாங்கத்தினது கல்விக் கொள்கைக்கு முரணாகவே ஆளுநரின் செயற்பாடு இடம்பெறுவதனைக்காணமுடிகின்றது
பொதுச்சேவை ஆணைக்குழுவின் 1589ஃ 30 அதிவிசேட வர்த்தமானியில்; குறிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புத்திட்டத்திற்கும் சேவைப்பிரமாணக்குறிப்புகளுக்கும் அமைவாக குறிப்பிட்ட பாடசாலையில் தங்களது சேவைக்காலத்தினை நிவர்த்திசெய்யவேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளஇந்த நிபந்தனைகளை ஆளுநர் மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதாவது குறித்தபாடசாலையில் நியமனத்தில் வழங்கப்பட்ட கால எல்லைவரை கடமையாற்றவேண்டும் இதனை மீறி அக்காலங்களை பூர்த்திசெய்யாத ஆசிரியர்களையும் கட்டாயம் தங்களது மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டமை சட்ட நியாயாதிக்கத்திற்கு முரணாக இருப்பதுடன் மத்திய அரசாங்கத்தின் நிபந்தனைகளை மீறும் நடவடிக்கையாக இருக்கின்றது இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இடமாற்றம் ஒன்று மேற்கொள்ளவேண்டுமானால் இலங்கை சனநாயகச் சோசலிய குடியரசின் தாபனவிதிக்கோவை அந்த தாபன விதிக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள இடமாற்ற சபை தொடர்பானதும் கல்வியமைச்சின் 2007 20 சுற்றறிக்கையின்படியும் இடமாற்றசபைதான் ஆசிரியர்களது இடமாற்றத்தினைத் தீர்மானிக்கவேண்டும் இதனை மாற்றி ஆளுநர் இவ் இடமாற்றத்தை வழங்குவது அவ் அதிகாரங்களை மீறும் செயற்பாடாக அமைகின்றது.