கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் தங்களின் நலன்புரி நடவடிக்கைகள் பற்றி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் ஒன்றினை இரண்டாவது தடவையாக மேற்கொண்டனர்.
வியாழக்கிழமை 2018.5.24 காலை 10.00 மணிக்கு வளாகத்தில் இருந்து புறப்பட்ட இம்மாணவர்கள் அநுராதபுரம் சந்தியில் இருந்து கண்டி வீதி வழியாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையம் வரை சென்று மீண்டும் அதே பாதையால் அயரம் சுற்றுவளைவு சென்று அங்கு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதால் திருகோணமலை நகரத்திற்கு செல்லும் போக்குவரத்துகள் தடைப்பட்டது.
பொலிசார் தலையிட்டு வாகனங்களை ஒருவழித்தடத்தில் செல்லவும் வரவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர்.
இவர்களின் முதல் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த ஒன்பதாம் திகதி 2018.05.09 மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து உட்துறைமுக வீதிவழியாக துறைமுக பொலிஸ்நிலையம் சந்தி சென்று தபால் நிலைய வீதி கடற்படைத்தள வீதிவழியாக பிரதான பஸ்நிலையம் வரை கால்நடையாக மௌமாக வரிசைக் கிரமமமாக வந்து பொது வாகன தரிப்பிடத்தில் போராட்டத்தில் ஈடுட்டு கலைந்து சென்றிருந்தனர்.