கிழக்குமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண கல்வி, கலாசார,விளையாட்டு துறை அமைச்சின் அனுசரணையில் நடப்பாண்டுக்கான 44 வது விளையாட்டு பெருவிழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் 44ஆவது விளையாட்டு பெருவிழா கிழக்குமாகாண கல்வி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துபண்டா தலைமையில் இரண்டு நாட்கள் (13-14.7.2018) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் 25 பெரும்விளையாட்டு நிகழ்வுகளுடன்,சுவட்டு விளையாட்டுக்களும் நடைபெற்றது.
கிழக்குமாகானத்திற்கான விளையாட்டு பெருவிழா நிகழ்வுகளில் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை
இரண்டு நாட்கள் நடைபெற்ற 2018 ஆண்டுக்கான 44 வது , விளையாட்டு பெருவிழா போட்டிகளில் கலந்துகொண்ட மூன்று மாவட்டங்களில் 71 தங்க பதக்கங்களையும் , 62 வெள்ளி பதக்கங்களையும் , 39 வெண்கல பதக்கங்களையும் பெற்று முதல் இடத்தினை திருகோணமலை மாவட்டமும்,61 தங்க பதக்கங்களையும் , 60 வெள்ளி பதக்கங்களையும் 44 வெண்கல பதக்கங்களையும் பெற்று இரண்டாவது இடத்தினை அம்பாறை மாவட்டமும், 50 தங்க பதக்கங்களையும் , 37 வெள்ளி பதக்கங்களையும் , 39 வெண்கல பதக்கங்களையும் பெற்று மூன்றாவது இடத்தினை மட்டக்களப்பு மாவட்டமும் பெற்றுக்கொண்டது .71 தங்க பதக்கங்களையும் , 62 வெள்ளி பதக்கங்களையும் , 39 வெண்கல பதக்கங்களையும் பெற்று கிழக்குமாகனத்தின் 2018 ஆண்டு 44 வது விளையாட்டு பெருவிழாவில் திருகோணமலை மாவட்டம் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .
நடைபெற்ற இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார்,சிறப்பு அதிதிகளாக மாகானவிளையாட்டு திணைக்கள பணிப்பாளர் என்.மதிவண்ணன், மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன் , மாநகர பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் ,மாநகர சபை உறுப்பினர்கள் , கிழக்குமாகான விளையாட்டு துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட மூன்று மாவட்டங்களின் விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்தும், சான்றிதழ்கள்,கேடயங்கள் வழங்கப்பட்டது.