கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 127ஆக அதிகரித்துள்ளதாகவும்,பொதுமக்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிமனையில் இன்று வியாழக்கிழமை(19)பிற்பகல் 1.00 மணியளவில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.இவ் ஊடக சந்திப்பிலே மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் எம்.அச்சுதன்,பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வீ.குணராஜசேகரம் மற்றும் சுகாதார உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…இது வெறுமனே சுகாதாரப்பிரிவினரும்,பாதுகாப்
கிழக்கு மாகாணத்தில் கொரோனா சிசிச்சைக்காக மேலும் நான்கு வைத்தியசாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அதில் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச தைத்தியசாலையும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையும், கல்முனையில் பாலமுனை பிரதேச வைத்தியசாலையும், அம்பாறையில் தமன பிரதேச வைத்தியசாலையும் மேற்படி கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலைகளாக மாற்றப்படவுள்ளதாகவும்,இவ்வைத்
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கிராமங்கள் தோறும் ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களையும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களையும் இனங்கண்டு அவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், தனிநபர் இடைவெளியை பேணுமாறும், குழுக்களாக செயற்படுவதை நிறுத்துமாறும், முகக்கவசங்களை உரையாடல்களின் போது கட்டாயமாக பயன்படுத்துமாறும், பயணங்களின் போதும் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியை பேணுமாறும், தும்மல் மற்றும் இருமலின் போது சரியான வழிமுறைகளை பின்பெற்றுமாறும் சுகாதார துறையால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டதுடன் பொதுமக்களின் விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கும் விதத்தில் சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்ட கொவிட்-19 விழிப்புணர்வு இறுவட்டு கலந்துகொண்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் மேற்படி வைத்திய உயரதிகாரிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.