குறைவான வயதுடைய பிள்ளைகளின் தாய்மார்கள் வெளிநாடு செல்லத்தடை

குறைவான வயதுடைய பிள்ளைகளின் தாய்மார்களை வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதற்கு தடை விதிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி 18 வயதுக்கு குறைவான வயதுடைய பிள்ளைகளின் தாய்மார்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அனுமதியை மறுக்குமாறு கோரியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் அபேரத்ன தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“குறித்த கோரிக்கை தொடர்பான கடிதத்தை மகளிர் மற்றும் சிறுவர் நடவடிக்கை அமைச்சின் செயலாளரினூடாக அமைச்சுக்கு கையளித்துள்ளோம்

மேலும் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப்பிரிவினர் எம்மிடம் பல கேள்விகளை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்தே குறித்த விடயம் தொடர்பாக கடிதம் ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கு அனுப்பி வைத்தோம்” என தெரிவித்துள்ளார்.

Related posts