குழந்தைகளுக்கு பீடியாபுறோ பால்மாவிநியோகம்.

கொரோனா வைரஸ் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு பல சமூக சேவை நிறுவனங்களும் தன்னார்வ தொண்டர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்த வண்ணம் இருக்கின்றனர்.
 
அந்த வகையில் அம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊறணி மணற்சேனை ஆகிய கிராமங்களில் வசீகரன் சமூக அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மகான் கோடீஸ்வரன் அவர்களால் இறைபதம் அடைந்த தனது மகன் வசீகரனது 11 வது நினைவு தினமான நேற்று குழந்தைகளுக்கான பால்மா பெற்றாரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
 
காரைதீவு பிரதேசசபையின் தவிசாளரும்  சமூக செயற்பாட்டாளருமாகிய கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.ரி.சகாதேவராஜா இளம் விஞ்ஞானி வினோஜ்மார் ஆகியோர்கலந்து கொண்டனர்.
 
இதன் போது 6மாதம் நிரம்பிய குழந்தைகளுக்கும் 1-3 வயது நிரம்பிய குழந்தைகளுக்குமான (பீடியா புரோ) பால்மா பக்கற்றுக்கள் குழந்தைகளின் பெற்றhர்(பராமரிப்பாளர்களிடம்)  வழங்கி வைக்கப்பட்டன.
 
இதன் போது வசீகரன் சமூக அறக்கட்டளை அமைப்பிற்கு நன்றி தெரிவித்த மக்கள் தங்களது குறைகளை காரைதீவு சமூக செயற்பாட்டாளர் ஜெயசிறில் அவர்களிடம் தெரிவித்தபோது மக்களுக்கான வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்க தாம் உதவி செய்வதாக மக்களிடம் தெரிவித்தார்.மேலும் எமது சமூகம் மதுவிற்கு அடிமையாகாமல் நாட்டின் சூழல் அறிந்து செயற்படுமாறும் மக்களை கேட்டுக் கொண்டார்.
 
இதன் போது உரை நிகழ்த்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.ரி.சகாதேவராஜாஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முற்றாக ஒழியவில்லை என்றும் மக்கள் சுகாதார ஆலேசனைகளை முடிந்தளவு கண்டிப்பாக பின்பற்றி தேசிய பாதுகாப்பிற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Related posts