கையடக்க தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்துவந்த பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது 17 கையடக்க தொலைபேசிகள் மீட்பு

அம்பாறை சம்மாந்துறையில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் சூட்சகமான முறையில் கையடக்க தொலைபேசிகளை திருடிய கடையில் கடமையாற்றிய  இருவர் மற்றும் கையடக்கதொலைபேசிகளை வாங்கி விற்பனை செய்து வந்த 2 கடை உரிமையாளர்கள் திருட்டுப் பொருளை வாங்கிய பெண் ஒருவர் உட்பட 8 பேரை  வெள்ளிக்கிழமை (06) கைது செய்ததுடன் 17 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர் 
 
சம்மாந்துறை நகர்பகுதில் அமைந்துள்ள கையடக்க தொபேசி வர்த்தகநிலையத்தில்  தொடர்ச்சியாக 20 மேற்பட்ட விலையுயர்ந்த கையடக்க தொபேசிகள் திருட்டுப்போயுள்ளது இந்த நிலையில் சம்பவதினமான  வெள்ளிக்கிழமை காலையில் வழமைபோல கடையைதிறந்தபோது அங்கு வைத்திருந்த 9 கையடக்க தொலைபேசி திருட்டுப் போயுள்ளதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
 
இதனையடுத்து கல்முனைப் பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம். ஜெயரட்ன ஆலோசனைக்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி கே.டி.எச்.  ஜயலத்தின்   வழிகாட்டலில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் தலைமையில் சென்ற சார்ஜன்ட் ஆரியசேன (24893), கன்ஸ்டபிள்களான துரைசிங்கம் (40316), ஜகத் (74612) குழுவினர் சந்தேக நபர்களைக்கைது செய்துள்ளனர்.
 
 
இதனையடுத்து கடையின் சி.சி.ரி கமரா காணொளியினை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்ட  போது குறித்த கடையில்  ஏற்கனவே  திருடப்பட்ட கையடக்க தொலைபேசி ஒன்றின் கிமி நம்பரை வைத்து அவரின் விலாசத்தை கண்டுபிடித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த கடையில் கடமையாற்றிய ஒருவரிடம் இருந்து வாங்கியதாக  தெரியவந்ததையடுத்து கடையில் கடமையாற்றிய இருவரையும் கைது செய்தனர். 
 
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் கடையை பூட்டும் போது பின்பகுதியில்  உள்ள ஒரு கதவை திறந்துவைத்துவிட்டு செல்வதாகவும் பின்னர் இரவில் சிசிரி கமாரவை நிறுத்திவிட்டு கையடக்க தொலைபேசிகளை திருடி அதனை சாய்ந்தமருது, காரைதீவு  பிரதேசங்களில் உள்ள  தொலைபேசிகளை வாங்கி விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை செய்து வந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து காரைதீவு சாய்ந்தமருது பிரதேசங்களில் தொலைபேசி வாங்கி விற்பனை செய்யும் கடை உரிமையாளர் இருவர் மற்றும் திருட்டு கையடக்க தொலைபேசியை வாங்கிய பெண் ஒருவர் உட்பட 8 பேரை கைது செய்ததுடன் திருடப்பட்ட 20 கையடக்க தொலைபேசிகளில் 17 தொலைபேசிகளை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
அதே வேளை, குறித்த சம்பவத்தில் கைத்தொலைபேசிகளைக் களவாடியவர்கள், அதை வாங்கியவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட 8 சந்தேக நபர்களும் இன்று (7) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts