நாவிதன்வெளி மத்தியமுகாம் 04 கிராமம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தொற்றிரு ந் து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி விசேட பிரார்த்தனை வழிபாடு நேற்று இடம்பெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார அலுவலர் கு.ஜெயராஜி இவ் ஏற்பாட்டை செய்திருந்தார்
பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் தொற்றிருநது மக்களையும்இ நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி விசேட பிரார்த்தனை வழிபாடு அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குருந்தையடி ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் ஆலயபரிபாலனசபையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது