கொரோனா வைரசும் பொது மக்களும்

இன்று உலக நாட்டையே அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள இந்த கண்ணுக்கு தெரியாத வைரசானது மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும் பறவைகள் மிருகங்களில் இருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ் என்றும் பலரும் பலவாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் கூறி வருகின்றனர் எது எவ்வாறானதாக இருந்தாலும் வைரசின் தாக்கமானது மக்களின் உயிர்களை காவுகொள்வது உண்மையானதாகும்.
 
இன்றைய மருத்துவ உலகமானது போட்டிபோட்டுக்கொன்டு பல விதமான ஆராய்ச்சிகளையும் ஆய்வுகளையும் செய்து வருகின்றனர் இதில் பரிச்சாத்தமாக வெற்றியும் கண்டுள்ளனர் இருந்து கன்டு பிடிக்கப்பட்ட மருந்தினை பரிச்சிக்கப்பட்டு அதன் சாதக பாதக நிலைகளை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர் குரங்குகளுக்கு பரிச்சாத்தமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவுகளை ஆராய்ந்ததன் பின்னர்தான் மனிதர்களுக்கு அறிமுகமாகும் இருந்தும் இது மனிதபாவனைக்கு தைமாதத்திற்கு பின்னர்தான் அறிமுகமாகலாம் என எதிர்பாக்கப்படுகின்றது.
 
கொரோனா வைரசானது மக்களுக்கு சிறந்த படிப்பினையினை கொடுத்துள்ளது மக்களை மக்கள் சந்திப்பதற்கு பயப்பிடுகின்ற காலகட்டமாகவும் வீதிகளில் வாகனங்களின் போக்குவரத்துக்ள் குறைவடைந்து மக்கள் நடமாட்டம் குறைந்ததினால் மக்களினால்;  உருவாக்கப்படுகின்ற கழிவுகளையும் வீதிகளில் கானமுடியவில்லை. வளிமாசு அடைவது குறைந்துள்ளது நீர் நிலைகள் சற்று நின்மதியாக உள்ளது என்று சொல்லலாம் மனிதனால் திட்டமிட்ட காடுகள் அழிப்பது கனிய வழங்களை தோண்டுவது சற்று குறைகடைந்துள்ளது எரிபொருளுக்கான கேள்வியும் நாட்டில் குறைந்துள்மையினை உலக நாடுகளில் அவதானிக்க முடிகின்றது.
 
இறைவன்தந்த இயற்கை வழங்களுக்கெல்லாம் சற்று ஓய்வு எடுப்பதற்கான விடுமுறையினை மக்கள் இந்த கொரோனா மூலமாக வழங்கியுள்ளனர் என்றுதான் நினைக்கத்தோன்றுகின்றது. அனைத்து இயற்கை வழங்களும் ஆறுதல் அடைந்துள்ளகாலம் என்றால் இந்த கொரோனா காலகட்டம் என்றே கூறலாம்.
 
காலத்திற்கு காலம் ஒவ்வருவிதமான நோய்களும் வருவது வழமையானதாக இருந்தாலும் இவ்வாறான ஆள்கொல்லி நோயை எவரும் பாத்திருக்கமுடியாது. மலேரியா கொலரா சால்ஸ் வைரஸ் றிபோலா வைரஸ் பிலேக்நோய் சிக்கின்கூனியா பன்றிக்காச்சல் எலிக்காச்சல் என பல விதமான தொற்நோய்களை உலகம் சந்தித்திருக்கும் ஆனால் இவ்வாறான கொரோனாவை சந்தித்தது இதுவே முதல்தடவையாகும்.
 
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்  அன்றாடம் கூலித்தொழில்செய்து வாழ்க்கை நடத்துகின்ற மக்களின் நிலமை மோசமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது விவசாயிகள் வர்த்தகர்கள் மற்றும் ஏனைய சிறுகைத்தொழிலாளர்கள் என பலரும் பதிக்கப்பட்டு ஒட்டுமொத்த பொருளாதாரத்தினையும் நிலைகுலைய வைத்துள்ளது இந்தகொரோனா.
 
கொரோனாவின் தாக்கத்தினால் பணமும் மணமும் படைத்தவர்கள் ஏழைமக்களுக்கு உணவுப்பொதிகளை தாராளமாக வழங்கிவருகின்றமையும் அதைத்தவிரவும் தனியார் தொண்டார்வ நிறுவணங்கள் பல இலட்சம் பெறுமதியான பொருட்களை வழங்கிவருவதும் அவதானிக்க முடிகின்றது இலங்கை அரசாங்கமானது இம்முறை புதிய ஒரு யுத்தியினை கையாண்டு பணமாகவே மக்களுக்கு கொடுப்பனவுகளை செய்து வந்தமை மக்களுக்கு எவ்விதமான தாமதமும் இன்றி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் அரசு மீண்டும் இரண்டாம் கட்ட கொடுப்பனவை மேமாதம் 15ம் திகதிக்கு முன்னர் வழங்க உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts