கொழும்பில் உலர் உணவு விநியோம்

கொழும்பு கம்பனி தெரு , மோகன் வீதி  மற்றும் கிவி வீதி பொலிஸ்  பிரிவுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்  விநியோகிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (18) நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையில் நடைபெற்றது. 
 
கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக  விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே  இந்த நிகழ்வு இடம்பெற்றது.
 
பெற்றோலிய வளங்கள் நிறுனத்தின் தலைவர் முஹம்மட் உவைஸ், நீதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் பயாட் பாக்கீர்,   நீதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நலின் சமரகோன், நீதி அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி முகம்மட்  முப்லிஹ்  மற்றும் உல்பத்  உவைஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 

Related posts