கோட்டைக்கல்லாறில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஒன்று தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் சனிக்கிழமை(15)காலை 10.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது

(க.விஜயரெத்தினம்)
கோட்டைக்கல்லாறில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஒன்று தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் சனிக்கிழமை(15)காலை 10.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் த.சுதாகரன்,கட்சியின் கோட்டைக்கல்லாறு அமைப்பாளர் கே.உதயகுமார் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியினர்,பெண்கள்,இளைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

கோட்டைக்கல்லாற்றில் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ள இடங்கள் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் இனங்காணப்பட்டு சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.குறிப்பாக மண்,குப்பைகள்,பிளாஸ்ரிப்பொருட்கள்,போத்தல்கள்,இலத்திரணியல் கழிவுகளால் வடிகால் அடைக்கப்பட்டு நீர் தேங்கியுள்ளதுடன்,மண்திட்டிகளுடன் காணப்பட்டது.இதனால் வடிகால்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து காணப்பட்டது.இதனால் கோட்டைக்கல்லாற்றில் 4பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி சிசிச்சை பெற்று வருகின்றார்கள்.

இதனைத் தொடர்ந்து துப்பரவு செய்யப்பட்ட கழிவுகள் அனைத்தும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபை வாகனங்கள் கொண்டு துப்பரவு செய்யப்பட்டது.கோட்டைக்கல்லாற்றில் உள்ள பொது இடங்கள்,வடிகால்கள்,பாழடைந்த பகுதிகள்,தனியார் காணிகள்,தனியார் நிறுவனங்களில் வீட்டுக்கழிவுகள்,ஏனைய கழிவுகளை வீசுவதையோ அல்லது களவாக போடுவதையோ தவிர்க்குமாறு கோட்டைக்கல்லாறு மக்களிடம் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் த.சுதாகரன் மிகவும் தாழ்மையுடன் இதன்போது கேட்டுக்கொண்டா

Related posts