போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சங்கர்புரம் கிராமத்தில் காரைக்குளம் முள்ளிக்குளம் இரண்டு குளங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு (15)சங்கர்புரம் லெட்சுமி விவசாய அமைப்பின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி மற்றும் பாம்பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் அம்பாரை நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் மண்டுர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பாடசாலையின் அதிபர் கிராம அமைப்புக்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத்தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் பாம் பவுண்டேசன் நிறுவனம் 1.02 மில்லியனும் அம்பாரை நீர்பாசன திணைக்களம். .85 மில்லியனும் செலவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இப்பகுதி மக்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி இக்குளத்தினை புனரமைப்பு செய்துள்ளனர் இவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்
மேலும் பலர்கருத்து தெரிவித்திருந்தார்கள் இக்கிராமத்தில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. என குறிப்பிட்டிருந்தார்கள் குறைகளை கூறுகின்றபோது நிறைகளையும் கூறிக்கொள்ளவேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1806 கிராமங்கள் இருக்கின்றன அவற்றிக்குத்தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டிய தேவை மாவட்ட செயலகத்திற்குள்ளது.இதனடிப்படையில் நாங்கள் படிப்படியாக சில வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்
எனவே இந்த மாவட்டத்திலுள்ள கிராமங்களைவிட இக்கிராமம் மிகவும் சிறப்பான பசுமையான குடிறேயற்ற விவசாயகிராமம் காணப்படுகின்றது என தனதுரையில் குறிப்பிட்டடிருந்தார்